ஆரணி குப்புசாமி முதலியார் (Arani Kuppuswamy Mudaliar)
Tamil Author Arani Kuppuswamy Mudaliar

Arani Kuppuswamy Mudaliar

About the author

இவர் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் மாவட்ட பள்ளி ஆசிரியராகவும் பின்பு கலால் துறையில் கண்காணிப்பாளராகவும். 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் புகழ் பெற்று விளங்கிய நூலாசிரியர் நாகவேடு முனுசாமி முதலியார் நடத்தி வந்த 'ஆனந்த போதினி' மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில் 'ஆனந்த போதினி’ 20,000 பிரதிகள் விற்பனை ஆகும் அளவிற்குக் காரணமாக இருந்தது. இவரது தொடர் கதைகளும், நாவல்களும் தான்! நடுத்தர குடும்ப மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் பரவுவதற்கு இவரது எழுத்துக்கள் காரணமாக இருந்தன.

இவர் ஏறத்தாழ 75 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பாலானனை துப்பறியும் கதைகளே. அவற்றுள் சில பல பாகங்களைக் கொண்டு மிக நீண்ட நாவலாக வெளிவந்துள்ளன. இவருடைய ‘ரத்தினபுரி ரகஸியம்' 9 பாகங்களையும் 'ஞான செல்வம்மாள்' 5 பாகங்களையும் கொண்டது. இவர், ஒரு நாளைக்கு பல மணிநேரம் எழுதும் பழக்கம் கொண்டவர். இவரது நாவல்கள் ஆங்கிலத் தழுவலாக இருந்தாலும், பெயர்களும் சம்பவ இடங்களும் தமிழ் மரபுடன் அமைந்தவை. இவர். பகவத் கீதை, கைவல்ய நவநீதம் ஆகிய நூல்களுக்கும் விளக்கவுரை எழுதி வெளியிட்டார்.

MORE BOOKS FROM THE AUTHOR - ஆரணி குப்புசாமி முதலியார் (Arani Kuppuswamy Mudaliar)

Devasundari

Author: Arani Kuppuswamy Mudaliar

Category: Social

249.00 / $ 6.24

Be first to Write Review
Back To Top