முனைவர் பா.ஜம்புலிங்கம் (Dr.B. Jambulingam)
Tamil Author Jambulingam

Dr.B. Jambulingam

About the author

முனைவர் பா.ஜம்புலிங்கம், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி உதவிப்பதிவாளராக பணி நிறைவு பெற்றவர். சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998) பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

சிறுகதைத்தொகுப்பான வாழ்வில் வெற்றி (2001), மொழிபெயர்ப்புகளான மரியாதைராமன் கதைகள், பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), க்ளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் (2004) என்ற நூல்களைத் தனியாகவும், தஞ்சையில் சமணம் (2018) என்ற நூலை மணி.மாறன், தில்லை. கோவிந்தராஜன் ஆகியோராடு இணைந்தும் எழுதியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995) சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999) பெற்றுள்ளார். தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004) ஆகிய மலர் பதிப்புப்பணிகளில் உறுப்பினராக இருந்துள்ளார். 2003 புத்த பூர்ணிமாவின்போது வானொலியில் உரையாற்றியுள்ளார். 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 16 புத்தர் சிற்பங்களையும், 13 சமணர் சிற்பங்களையும் கண்டெடுத்துள்ளார்.

தமிழ் விக்கிபீடியாவில் 600+, ஆங்கில விக்கிபீடியாவில் 100+, சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 100+, முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூவில் 250+, நாளிதழ்கள் மற்றும் ஆய்விதழ்களில் 200+ கட்டுரைகளை எழுதியுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - முனைவர் பா.ஜம்புலிங்கம் (Dr.B. Jambulingam)

Vaazhvil Vetri

Author: Dr.B. Jambulingam

Category: Social

75.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top