கவிமதி. சோலச்சி (Kavimathi. Solachy)
Tamil Author Kavimathi. Solachy

Kavimathi. Solachy

About the author

இவர் இயற்பெயர் தீ.திருப்பதி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது இவரது அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள்.

இவர் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய காலம் அது. அப்போதுதான் இவர் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களிடம் தஞ்சம் அடைந்தார். , .மறுக்காமல் இவர்கள் வறுமை நிலையை போக்கியதோடு மாலை நேரம் அவர் வீட்டில் வந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

அவர் ஆசிரியர் வீட்டுக்கு சென்ற போது அவரைப்போல் ஏராளமான ஏழை மாணவர்கள் படித்துக் கொண்டு இருந்தனர். ஆங்கிலம், கணக்கு, அறிவியல் சொல்லிக் கொடுத்தார்கள். இவரும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.

அன்று அவர்கள் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் அரிசி,காய்கறிகள், மளிகைசாமான், சமைக்கப் பாத்திரம், அவர்கள் உடுத்திக்கொள்ள துணிமணிகள், கைச்செலவுக்கு பணம் இன்னபிறவும் கொடுத்து உதவவில்லை என்றால் அவர் படிப்பும் பாதியில் நின்றிருக்கும். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் எழமுடியாமல் இருந்த அவர் தாயைக் காப்பாற்றவும், அவர் தந்தை மற்றும் தங்கையைக் காப்பாற்ற அவர் அண்ணனோடு (கவிஞர் புதுகை.தீ.இர) பிழைப்பு தேடி அப்போது அலைந்திருப்பார்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். அவர்கள் நீட்டிய அந்த உதவிக்கரம் , அவர் மேல்படிப்பு (ஆசிரியர் பயிற்சி) படிக்கும் வரை அவர்களைப் போலவே பேராசிரியர் பெருமக்களும் உதவிக்கரம் தந்தார்கள்.

ஆசிரியர் பயிற்சி புதுக்கோட்டையில் (2000-2002) பயின்ற காலத்தில் போற்றுதலுக்குரிய செல்வி.நா.விஜயலெட்சுமி அம்மா அவர்கள், திருமதி.டி.அகிலா அம்மா அவர்கள், திரு.சொ.சுப்பையா அவர்கள் (தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்) , திரு.மு.மாரியப்பன் அவர்கள், திரு. நா.செல்லத்துரை அவர்கள் (தற்போது DIET முதல்வர்) , திரு.ம ராஜ்குமார் அவர்கள், திரு.ஜமால்நாசர் அவர்கள், திரு. கோ.முருகன் அவர்கள், திரு.டி.மாரியப்பன் அவர்கள், மற்றும் மேலான அவர் பாசத்திற்குரிய நண்பர்களும் உதவிக்கரம் நீட்டி அவரை ஆதரித்தார்கள்.

இவர் வாழ்க்கையில் முதல் ஒளியை ஏற்றிவைத்த இவரது ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எண்ணியபோதுதான் அவரது பெயரையே புனைப்பெயராக "சோலச்சி " என்று வைத்துக்கொண்டார்.

அவர் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள் கொடுத்த சேலையை படுத்த படுக்கையில் நோய்வாய்ப்பட்டு செயலிழந்து கிடந்ததால் அவரது தாயால் கடைசிவரை அந்த சேலையை கட்டாமலேயே 2004 இல் நவம்பர் 25 ஆம் தேதி (நான் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்த இருபத்தெட்டாம் நாள்) இறந்து போனார்கள்.

இவரது முதல் நூலான "முதல் பரிசு " சிறுகதை நூல் வெளியீட்டு விழா 19.08.2015 அவர் அண்ணன் பிறந்தநாள் அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இளைய எழுத்தாளர்களின் வழிகாட்டி எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்கள் தலைமையில் அவரது ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் வெளியிட்டு சிறப்பு செய்தார்கள்.

இவரது ஆசிரியர் பெயரையே புனைப்பெயராக வைத்துக்கொண்ட சோலச்சியின் வரலாறு இதுதான்.

இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் அரசுப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

MORE BOOKS FROM THE AUTHOR - கவிமதி. சோலச்சி (Kavimathi. Solachy)

Kattu Nerinji

Author: Kavimathi. Solachy

Category: Social

125.00 / $ 3.99

Be first to Write Review

Muthal Parisu

Author: Kavimathi. Solachy

Category: Social

88.00 / $ 2.99

Be first to Write Review
Back To Top