ஆர். ஜீவரத்தினம் (R. Jeevarathinam)
Tamil Author R. Jeevarathinam

R. Jeevarathinam

About the author

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நல்லான்பிள்ளைபெற்றாள் என்ற கிராமத்தில் பிறந்தவர். இளமையிலிருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர். படிக்கின்ற காலத்திலிருந்தே கவியரங்கம், பட்டிமன்றம் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்டு தனது ஆன்மீக அறிவை வளர்த்துக்கொண்டார். ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களைப் படிப்பதோடு, இலக்கிய சொற்பொழிவுகளைக் கேட்பதும் இவரது பழக்கம். ஸ்ரீமகாபாரதத்தில் கண்ணனின் அதிசயத்தக்க நிகழ்வுகளே இந்த நூல் எழுத ஊன்றுகோலாக அமைந்தது.

இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு நிலவள வங்கியில் கணக்கு அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவருடைய மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி. இவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். பணி ஓய்விற்குப் பின் தனக்கிருந்த ஆன்மீக நாட்டம் காரணமாக, மகாபாரதத்தில் கண்ணன் நிகழ்த்திய அற்புதங்களைத் தொகுத்து ஒரு நூலாக வடிவமைத்தார். நூல் அச்சடிக்கப்பட்டு வெளியாகும் நேரத்தில் 2019 ஜனவரி 19 ஆம் நாள் திடீரென இயற்கை எய்தினார். ஆயினும் அவருடைய விருப்பப்படியே, 2019 ஜுன் 9 ஆம் நாள், இவருடைய ‘மகாபாரதமும் மாயக்கண்ணணும்’ இந்த நூல் சென்னை பாரதிய வித்யா பவனில் திரு.ஜீவரத்தினம் அவர்களின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் வெளிடப்பட்டது.

MORE BOOKS FROM THE AUTHOR - ஆர். ஜீவரத்தினம் (R. Jeevarathinam)

Mahabharathamum – Mayakannanum

Author: R. Jeevarathinam

Category: Spiritual

99.00 / $ 3.49

Rating :
Back To Top