விஷ்ணு ப்ரியா (Vishnu Priya)
tamil/vishnupriya-2x.jpg

Vishnu Priya

About the author

வணக்கம் இனிய தோழமைகளே,

நான் விஷ்ணுப்ரியா.இலங்கையின், கொழும்பில் வசிக்கிறேன். கடல் கடந்து வாழும் என் போன்ற ஈழ எழுத்தாளரையும், பரந்து விரிந்த இந்த உலகில் வாழும் இணையத் தமிழர்கள்.. ஏற்றுக் கொள்வார்கள், அங்கீகரிப்பார்கள் என்ற தன்னம்பிக்கையுடன் புஸ்தகாவில் என் படைப்புக்களை வெளியிடுகிறேன்.

இணைய புத்தக உலகிலும் என் படைப்புக்களையும் வெளியிட அருள்புரிந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் நான்.. எழுதுவதும், வாசிப்பதும் தான் என் கண்ணெனக் கொள்வேன் என்பேன். புத்தகமாக வெளிவந்த என் கதைகள் புஸ்தகா மூலம் ஈபுக்காக வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இதுவரை, இறைவன் கிருபையால் எட்டு நாவல்கள் எழுதியுள்ளேன். அனைத்துமே என் இதயவடுக்கில் கற்பனையாக எழுந்த கதை மாந்தர்களையும், தலைவன், தலைவி, அவர் தம் காதல் மற்றும் ஊடல்.. ஊடலுக்குப் பின் மீண்டும் முகிழ்க்கும் காதலோடிணைந்த கூடல் இவற்றைக் கொண்டு பின்னப்பட்டவையே இந்தக் கதைகளாகும்.

ஒவ்வொரு கதையுமே தனி ரகம்.. அனைத்துமே இன்பமூட்டும் காதற்சுவைக் கட்டங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டவை.

என் கதையின் கதாமாந்தர்களான தலைவனும், தலைவியும்.. வாசிக்கும் உங்கள் மனதையும் ஆட்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

கதையைப் படித்ததும்.. அதன் தாக்கத்தால் ஓரிரண்டு வார்த்தைகள் என்னோடு அளவளாவத் தோன்றினால்.. தாராளமாக Vishnupriyawrites@yahoo.com என்னும் என் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி.

இப்படிக்கு, உங்கள் விஷ்ணுப்ரியா.

MORE BOOKS FROM THE AUTHOR - விஷ்ணு ப்ரியா (Vishnu Priya)

Un Idhayam... En Vasathil...!

Author: Vishnu Priya

Category: Family

125.00 / $ 3.99

Rating :

Unnai Vida Illai Pudhumaiye...!

Author: Vishnu Priya

Category: Family

350.00 / $ 5.99

Rating :

Ennai Maatrum Kaadhaley!

Author: Vishnu Priya

Category: Family

350.00 / $ 5.99

Rating :

Kaadhal Cricket

Author: Vishnu Priya

Category: Love and Romance

175.00 / $ 3.99

Rating :
Back To Top