அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 (Asathal Nirvagikku Arputha Vazhigal 31)
Asathal Nirvagikku Arputha Vazhigal 31 - Tamil eBook

Asathal Nirvagikku Arputha Vazhigal 31

174.00 / $ 4.99

Author: Aruna Srinivasan

Language: All

Genre: Self Improvement

Type: Articles

ISBN: N/A

Print Length: 194 Pages

Write a review

Bad Good

About Book

பழைமையின் பெருமையில் மட்டுமல்ல...

பகவத் கீதையின் சுலோகங்களில் இன்றைய நிர்வாக

இயலின் கருத்துக்களை காண்பது இன்று எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் கீதை என்றில்லை. சுமந்திரா கோஷல், பீட்டர் டிரக்கர், சி.கே.பிரஹலாத் போன்ற நிர்வாக இயல் சிந்தனையாளர்கள் இன்று சொல்வதில் உள்ள யதார்த்தங்கள் பல, காலங்காலமாக நாம் கேட்டு வரும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் பாட்டி சொன்ன கதைகளிலும் ஒளிந்துள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இதிகாசங்கள் என்றில்லாமல் உலகம் முழுக்க அனேகமாக அனைத்து சான்றோர் வாக்குகளிலும், கதைகளிலும் இன்றைய நிர்வாக இயலின் பல அடிப்படைகளை இனம் கண்டுகொள்ளலாம்.

பண்டைய கால இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்கள் என்னும் அந்த சமுத்திரத்தில் முங்கி எடுக்கும் முத்துக்களுடன், இன்றைய நிர்வாக இயலில் விவரிக்கப்படும் பல கருத்துக்களை ஒப்பிட்டு அந்த யதார்த்தங்கள் இன்றும் பிரதிபலிப்பதை விவரிப்பது இந்த புத்தகத் தொகுப்பின் நோக்கம். அந்தக் காலத்திலேயே நம்மிடம் எல்லா வித்தையும் இருந்தன என்று பழங்கணக்கு பார்ப்பதோ அல்லது Old is gold என்று பழைய பெருமை பேசி மார்தட்டுவதோ நோக்கமல்ல இங்கு.

மாறாக மனித வள மேம்பாட்டுக்கு எப்படி சில அடிப்படையான சித்தாந்தங்கள் காலங்காலமாக வலுவூட்டுகின்றன என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்வது இன்றைய சவால் நிறைந்த வேலை சூழ்நிலைக்கு மிக அவசியம்.

இலக்கிய இதிகாசங்கள் மட்டுமல்ல; கிராமப்புறங்களில் சொல்லப்படும் கதைகள், மற்றும் நீதிக்கதைகள், பழங்கதைகள் (folklore and fables) இவற்றிலும் கூட ஊன்றி கவனித்தால் நிறைய கதைகளில் இன்றைய கருத்துக்களின் பிரதிபலிப்பு தெரியும். இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுத்து புதியதில் பழசின் பிம்பத்தை தேடும் முயற்சி இது.

About Author

30 வருடங்களுக்கு மேல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சுயேச்சை பத்திரிகையாளராக

இயங்கி வரும் அருணா ஸ்ரீநிவாஸன், இந்திய தினசரிகளான எக்கனாமிக் டைம்ஸ், பைனான்சியல் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், போன்ற செய்தித்தாள்களிலும், சிங்கப்பூரில் பிஸினெஸ் டைம்ஸ், தமிழ் முரசு போன்ற செய்தித்தாள்களிலும் இரு நாடுகளிலும் பல பத்திரிகைகளில் பத்திகளும் செய்திக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் சில பிரெஞ்ச், இத்தாலி மற்றும் சீன மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. திசைகள் மின்னிதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

ஆல் இந்தியா ரேடியோவில் காலை நிகழ்ச்சி தொடர் ஒன்று வழங்கியுள்ள இவரின் முதல் புத்தகம் பள்ளி மாணவர்களின் பொது வாசிப்புக்காக Portrayel of Women in Tamil Fiction எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு ஆய்வு நூல். National Council for Educational Research and Training அமைப்பின் வெளியீடு. இரண்டாவது புத்தகம், ஒரு பெண் பஞ்சாயத்து தலைவரின் போராட்டங்கள் பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்பு. அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31, இவரது மூன்றாவது புத்தகம்.

தற்போது இவர் வசிப்பது சென்னையில்.

Back To Top