காதல் கிரிக்கெட் (Kaadhal Cricket)
Kaadhal Cricket - Tamil eBook

Kaadhal Cricket

175.00 / $ 3.99

Author: Vishnu Priya

Language: All

Genre: Love and Romance

Type: Novel

ISBN: N/A

Print Length: 407 Pages

(Write a Review)

Write a review

Bad Good

Previous rating and reviews

  • Subhashri
    6 days ago

    Super story asusual...

About Book

வாசகப் பெருமக்களுக்கு என் இதயங்கனிந்த அன்பு வணக்கங்கள்.

அச்சுலகில் மட்டுமே

கால் பதித்த என்னை இணையத்திலும் கால் பதிக்க வைத்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்!!

பலருக்கும் கிரிக்கெட் பிடிக்கும் என்ற பொது அபிப்பிராயத்தை வைத்து ஆன்லைனில் நான் எழுதிய இரண்டாம் கதையான “நெஞ்சைப் பூப் போல் கொய்தவளே!” என்னும் என் அடுத்த முயற்சி தான்.. தற்போது “காதல் கிரிக்கெட் !” என்ற புது நாமம் பெற்று உங்கள் கை வசத்தில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

காதல் மண்ணவர்களை மட்டுமல்ல.. விண்ணவர்களை கூட விட்டு வைப்பதில்லை.. விண்ணவர்களே காதலில் ஆட்படும் போது.. தன் துடுப்பு மட்டையால் பந்தை விண்ணுக்கு தூக்கி தூக்கி அடிக்கும் கிரிக்கெட்டையுமா அது விட்டு வைக்கும்?

இப்படிபட்ட கிரிக்கெட்டில் காதலை புகுத்தலாமா? என்று எண்ணிய போது என் கற்பனையில் உதித்த... கிரிக்கெட் உலகை மையமாக வைத்து பின்னப்பட்ட கற்பனை கதையே இது..

யாவும் கற்பனையே! யாவரும் கற்பனைகளே!!

எந்தவொரு நாட்டையுமோ,நாட்டு மக்களையோ இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அன்றி... கதையின் சுவையை கூட்டுவதற்காகவே இந்த கற்பனை காட்சிகள் பின்னப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கிறேன்!!

இலங்கையின் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரன் “அபிமன்யு ராகவ்குமார்”.தனக்கென்று தனித்திறமைகளை தனித்துவமாக வைத்திருக்கும் ஆணவன்..

தன் சொந்த வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்கள் காரணமாக .. ஓடி ஒளிந்து திரியும் சமுத்திரன்..

நிசப்தியா..பெயருக்கும், ஆளுக்கும் சம்பந்தமே இல்லாத சுட்டிப் பெண்.. இலங்கையில் கண்டியில் இருக்கும் தம்பதி வனம் எனும் சிற்றூரில் ஊற்றெடுத்த.. எந்நேரமும் ஓயாது சலசலக்கும் காட்டாறு .

சமுத்திரமும், காட்டாறும் காதல் எனும் மையப் புள்ளியில் இணைந்தது எப்படி? அநேகமாக அனைவர் வாழ்க்கையிலும் விதி தான் விளையாடும்.

ஆனால் இவர்கள் வாழ்வில் கிரிக்கெட் விளையாடியது எப்படி? தெரிந்து கொள்ள.. நாடு, பேதம் மறந்து காதல்வாசிகளாக உள் நுழைந்து படியுங்கள் மக்களே!!

படித்ததும்... என்னிடம் கதை பற்றி இரண்டு வார்த்தைகள் அளவளாவ தோன்றினால்.. தாராளமாக Vishnupriyawrites@yahoo.com என்னும் மின்னஞ்சல்மூலம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

About Author

வணக்கம் இனிய தோழமைகளே,

நான் விஷ்ணுப்ரியா.இலங்கையின், கொழும்பில் வசிக்கிறேன்.

கடல் கடந்து வாழும் என் போன்ற ஈழ எழுத்தாளரையும், பரந்து விரிந்த இந்த உலகில் வாழும் இணையத் தமிழர்கள்.. ஏற்றுக் கொள்வார்கள், அங்கீகரிப்பார்கள் என்ற தன்னம்பிக்கையுடன் புஸ்தகாவில் என் படைப்புக்களை வெளியிடுகிறேன்.

இணைய புத்தக உலகிலும் என் படைப்புக்களையும் வெளியிட அருள்புரிந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் நான்.. எழுதுவதும், வாசிப்பதும் தான் என் கண்ணெனக் கொள்வேன் என்பேன். புத்தகமாக வெளிவந்த என் கதைகள் புஸ்தகா மூலம் ஈபுக்காக வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இதுவரை, இறைவன் கிருபையால் எட்டு நாவல்கள் எழுதியுள்ளேன். அனைத்துமே என் இதயவடுக்கில் கற்பனையாக எழுந்த கதை மாந்தர்களையும், தலைவன், தலைவி, அவர் தம் காதல் மற்றும் ஊடல்.. ஊடலுக்குப் பின் மீண்டும் முகிழ்க்கும் காதலோடிணைந்த கூடல் இவற்றைக் கொண்டு பின்னப்பட்டவையே இந்தக் கதைகளாகும்.

ஒவ்வொரு கதையுமே தனி ரகம்.. அனைத்துமே இன்பமூட்டும் காதற்சுவைக் கட்டங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டவை.

என் கதையின் கதாமாந்தர்களான தலைவனும், தலைவியும்.. வாசிக்கும் உங்கள் மனதையும் ஆட்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

கதையைப் படித்ததும்.. அதன் தாக்கத்தால் ஓரிரண்டு வார்த்தைகள் என்னோடு அளவளாவத் தோன்றினால்.. தாராளமாக Vishnupriyawrites@yahoo.com என்னும் என் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி.

இப்படிக்கு, உங்கள் விஷ்ணுப்ரியா.

MORE BOOKS FROM THE AUTHOR - Vishnu Priya

Ennai Maatrum Kaadhaley!

Author: Vishnu Priya

Genre: Family

350.00 / $ 5.99

Rating :

Unnai Vida Illai Pudhumaiye...!

Author: Vishnu Priya

Genre: Family

350.00 / $ 5.99

Rating :

Un Idhayam... En Vasathil...!

Author: Vishnu Priya

Genre: Family

125.00 / $ 3.99

Rating :
Back To Top