காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ் (Kaadhalin Menporul Savithiri Ganesh)
Kaadhalin Menporul Savithiri Ganesh - Tamil eBook

Kaadhalin Menporul Savithiri Ganesh

174.00 / $ 4.99

Author: M.G.S. Inba

Language: All

Genre: Biography

Type: Articles

ISBN: N/A

Print Length: 187 Pages

Write a review

Bad Good

About Book

காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ் குறும்புக் கலந்த வம்பு மொழி. காதலோடு

சோகம் கலந்த புதுயுகத்துச் சிலப்பதிகாரம். இங்கு பேசுப்பொருள் அகம் சார்ந்தவை. சில இடங்களில் புறமும் மான்வேட்டைக்குக் குறி பார்க்கும்.

காதலைச் சொல்லாத இலக்கியங்கள் மிகக் குறைவு. அரேபிய மண் துகள்கள் லைலாவின் பாதச்சுவடுகளைச் சுமக்கின்றது. ஆகரா அரண்மனை பளிங்குக் கற்கள் மும்தாஜைப் பச்சைக் குத்திக்கொண்டதை அறிவித்துக் கொண்டிருக்கிறது. குலோத்துங்கச் சோழனின் அந்தப்புரப் பால்கனியில் ஆடிக் கொண்டிருக்கும் திரைச்சீலைகள் அமராவதியை அனிச்சையாகச் சூடியதைப் பகிரங்கப்படுத்திச் சிரிக்கிறது. நஞ்சுக் கோப்பைகள் உடைந்து கீழேக் கிடந்தாலும் ஜூலியட் உருவம் சிதறியக் கண்ணாடிச் சிதறலில் நடனம் போட்டுக் கொண்டிருக்கிறது. அழிக்க நினைத்தும் அழிக்க முடியாத அகப்புறத்து இலக்கியங்கள்.

சாவித்திரியும் இந்த அகப்புறத்து இலக்கியமாக இருந்த காரணத்தால், புறம் அறிய சிரமம் எடுத்து இத்தேடலை உருவாக்கம் செய்துள்ளேன். கலைகளில் ஓவியம் சாவித்திரி என்ற நூலை நான் எழுதிய போது, சாவித்திரி மரணமடைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் இடைவெளியில் உருவான முதல் நூலாக அது அமைந்தது. நடிகையர் திலகத்தின் அகத்துடிப்பை என் பேனா பேசிட வழி அமைத்துத் தந்தவர், அம்மா விஜய சாமுண்டீசுவரி, அய்யா கோவிந்தராவ், அம்மா ஜெயந்தி கண்ணப்பன் என்ற மூவேந்தர்கள்.

என் தேடலில் உருவான சாவித்திரியின் வாழ்வியல் நூலில் இடம்பெறாத தகவல்களைத் தேடி காதல் இலக்கியம் படைத்துள்ளேன். சாவித்திரி-ஜெமினி வரலாறு தாண்டி நிற்கும் காதலின் மென்பொருட்கள்.

நான் எழுதி கல்கியில் தொடராக வந்த மையக்கருத்தைக் கோலமாக்கி இக்காதலை முன் மொழிகிறேன். என் மனதிற்குள் நான் இளங்கோவடிகள். என் பேனாவின் இந்த சிலப்பதிகாரம் நின்று பேசிக்காட்டும்.

அன்புடன்,
மு.ஞா.செ.இன்பா

About Author

எழுத்து துறையில் சாதிக்க விரும்பி, பல நூல்களை எழுதி உள்ள மு.ஞா.செ.இன்பா இதுவரை
இருபது நூல்களை எழுதி உள்ளார். திரையுலக நட்சத்திரங்களான சிவாஜி ,சந்திர பாபு ,சாவித்திரி, போன்ற கலைஞர்களின் வாழ்வியலை திரைப்படம் போல தொகுத்து எழுதி உள்ளார். இவர் எழுதிய கலைகளில் ஓவியம் சாவித்திரி என்ற நூல், நடிகையர் திலகம் என்ற படம் வெளிவர காரணமாக இருந்தது. விவிலியம் சார்புடைய நூல்களான தேவனின் திருப்பாடல், ஞானக்குறள், போன்றவை பலரின் விழிகளை வியப்புக்குள் கொண்டு சென்றது. இவர்களின் நூல்களை படித்து பாருங்கள். இவரை உங்களுக்கு பிடித்து போகும்.
MORE BOOKS FROM THE AUTHOR - M.G.S. Inba

Mmm.... Naanum......!

Author: M.G.S. Inba

Genre: Love and Romance

174.00 / $ 4.99

Be first to Write Review

Savithiri

Author: M.G.S. Inba

Genre: Biography

249.00 / $ 6.24

Rating :
Back To Top