கறுப்புப்பணத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கள் (Karuppu Panathil Nadantha M.G.R Noottrandu Vizhakkal)
Karuppu Panathil Nadantha M.G.R Noottrandu Vizhakkal - Tamil eBook

Karuppu Panathil Nadantha M.G.R Noottrandu Vizhakkal

49.00 / $ 1.99

Author: Umapathi K

Language: All

Genre: Social

Type: Articles

ISBN: N/A

Print Length: 42 Pages

Write a review

Bad Good

About Book

ஜனநாயக கட்டமைப்பை இயக்குபவர்கள் சாதாரண பொதுமக்கள்தான் என்று நினைத்துக்
கொண்டிருந்தால், அது தவறான எண்ணம் என்பது நடைமுறைகள் சுட்டிக்காட்டும் அனுபவமாக இருக்கிறது. மக்களின் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதமான வாக்கும், அரசியல்வாதிகள் விலைகொடுத்து வாங்கும்பொருளாக மாறி விட்ட அவலம்தான் தொடர்கிறது.

உண்மையில் ஜனநாயகத்தை இயக்குபவர்கள் அரசியல் வாதிகளும், ஆளும் அதிகாரமும், ஆட்சியாளர்களும்தான். இவைதான் நம்முன் நிற்கும் உண்மை. ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் 2005- நிறைவேற்றப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும், ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட தனிமனிதர்களும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வந்த வரபிரசாதமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கருதினர்.சட்டம் வந்த புதிதில் ஒரு சில ஆண்டுகள் வரை மத்திய, மாநில அரசின் நிர்வாகங்கள் தகவல்களை உரிய முறையில் அளித்து வந்தன.

ஆனால், அப்படி அளிக்கப்பட்ட தகவல்கள் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்தன. அப்படி கொடுக்கப்பட்ட தகவல்கள் முறைகேட்டை, ஊழலை அம்பலப்படுத்தின. இதன் விளைவாக தகவல் அறியும் உரிமை சட்டத்தால் தங்களுக்கு ஆபத்து என்பதை அதிகார வர்க்கம் உணர்ந்து கொண்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், பிரதமர் நரேந்திரமோடியின் படிப்பு பற்றிய தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான மனுவுக்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

தமிழகத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும். இவ்வளவு இடர்பாடுகளுக்கு இடையேயும், தமிழகத்தில் அறப்போர் இயக்கம், சட்டபஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும், சில தனிநபர்களும் போற்றுதலுக்கு உரியபணிகளைச்செய்து வருகின்றனர்.

இப்படி அமைப்புகள் தவிர விகடன் குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்று செய்திகளை வெளியிட்டு வருகின்றன. நான் விகடன் குழுமத்தில் பணியாற்றியபோது, தகவல் அறியும்உரிமை சட்டம் குறித்து அலுவலகத்தில் நடைபெற்றபயிற்சிகளில் பங்கேற்று உள்ளேன். அதன் அடிப்படையில் தகவல்களைப் பெற்று கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஊழல்களை வெளிப்படுத்திய அந்த கட்டுரைகள் என்னுடைய புலனாய்வு செய்தியாளர்பயணத்தில் குறிப்பிடத்தக்கவை. இந்த கட்டுரைகள் அனைத்தையும் புஸ்தகா இணையதளத்தின் மூலம் ஒரு தொகுப்பாக மின் இதழாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த கட்டுரைத் தொகுப்பின் மூலம் இந்த அரசாங்கம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக வாக்காளர்கள் அறிந்து கொள்ளமுடியும்.

About Author

எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு, வாசிப்பை நேசித்து இருந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில்
நானும் ஒருவன்.மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, அரசியல் ஆய்வு உள்ளிட்ட தளங்களில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன். தற்போது ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் தலைமை உதவி ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன்.என் குழந்தை பருவத்திலேயே உமாபதி என எனக்கு புனை பெயர் வைத்த என் தாய்மாமா சங்கிலி அவர்களை நினைவு கூறுகின்றேன். வெறும் செய்தியாளராக இருந்த என்னை, டோரிஸ் லெஸ்சிங் வாழ்க்கை வரலாறை மொழிபெயர்பு செய்யுங்கள் என்று கூறி, என்னை எழுத்தாளராக உருவாக்கிய ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.ப.திருமாவேலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
MORE BOOKS FROM THE AUTHOR - Umapathi K

Vellakaadu 2015

Author: Umapathi K

Genre: Social

49.00 / $ 1.99

Be first to Write Review

Thiruppumunai Nayagan M.G.R

Author: Umapathi K

Genre: Biography

99.00 / $ 3.49

Be first to Write Review

Tamizhaga Medai Aalumaikal

Author: Umapathi K

Genre: Others

99.00 / $ 3.49

Be first to Write Review

Doris Lessing

Author: Umapathi K

Genre: Biography

99.00 / $ 3.49

Be first to Write Review

Sindhikka Thoondum Ulaga Thalaivargalin Uraikal

Author: Umapathi K

Genre: Others

174.00 / $ 4.99

Be first to Write Review

Pudhuyuga Puratchi - Narayanamurthy-in Vazhkkai Varalaru

Author: Umapathi K

Genre: Biography

99.00 / $ 3.49

Be first to Write Review
Back To Top