மாவடு ராமுடு (Maavadu Ramudu)
Maavadu Ramudu - Tamil eBook

Maavadu Ramudu

99.00 / $ 3.49

Author: J.S. Raghavan

Language: All

Genre: Humour

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 148 Pages

Write a review

Bad Good

About Book

‘மாவடு பிடிக்குமா?' என்று கேட்டால், ‘பிடிக்குமாவா? என்ற துடுக்கான பதில் வெடுக்கென்று

பலரிடமிருந்து வரும். பளபள பீங்கான்ஜாடியில், உப்பு மற்றும் காரப்பொடி கலந்த சாகரத்தில் பதமாக ஊறி, அவ்வப்போது குலுக்கிவிடப்பட்டு, பிரத்யேகக் கரண்டியால் பரிமாறப்பட்டகாம்புடன் பரிமளிக்கும் ஒரு நத்தம் அல்லது சேலம் மாவடு, நானிருக்க பயமேன் என்று உறுதி அளித்தால், சரியாக உறையாத தயிர்விட்டுப் பிசைந்த சாதம்கூட சுவையாக அமைந்துவிடும். தயிர் புளிக்காமல், கெட்டியாக அமைந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். பிரும்மானந்தம்.

நகைச்சுவையும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. அவ்வப்போது சவசவ என்று அமைந்துவிடும் வாழ்க்கையையும் அது ருசிகரமாக ஆக்கிவிடுகிறது. தொட்டுக்கொள்ள நகைச்சுவைக் காட்சிகள் இல்லாவிட்டால், சினிமாக்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாகாமல், ஃபிலிம் பெட்டிக்குள் பாம்பாக முடங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு.

கல்கி, தேவன், நாடோடி போன்ற வித்தகர்கள், எழுத்தில் கொண்டு வந்த நகைச்சுவைக்கு ஈடு இணை இல்லை. நாற்பது, ஐம்பதுகளை பலருக்கு இன்றும் மகிழ்ச்சியுடன் நினைவுக்குக் கொண்டுவரும் அவர்களுடைய படைப்புகள், பொக்கிஷங்கள், கணினி, ஏசி போன்று தற்காலத்தில் மலிந்து இருக்கும் பல வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில், உடல் உபாதைகளையும் மீறி, அவர்கள் செய்தது சாதனை அல்ல. தவம்.

தங்கள் பங்கிற்கு, அவ்வாறு பேணப்பட்ட நகைச்சுவைக்காக, வாராவாரம் வட்டார ஏடுகளில் ஒதுக்கப்பட்ட இடத்தில், 'தமாஷா வரிகள்’ என்கிற தலைப்பில் நான் ஒரு சிறிய முயற்சியாக எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று உங்கள் கைகளில் தவழ்கிறது. மெல்லிய நகைச்சுவையில், மாவடுவாக நன்றாக ஊறியிருக்கும் என்று நம்புகிறேன்.

விரைவில், ஐநூற்றி ஐம்பது வாரங்களைத் தாண்ட இருக்கும் இக்கட்டுரைகளைப் படித்து, அவ்வப்போது மெயிலிலும், நேரிலும், தொலைபேசியிலும் பாராட்டிவரும் வாசகர்களுக்கு என் நன்றிகள். இதற்கு வித்திட்ட, வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், கட்டுரைகளுக்கான படங்களைத் தீட்டி, காலம் தவறாது அளித்துவரும் ஓவியர் நடனம் மற்றும் சிறந்த முறையில் புத்தகத்தை பதிப்பித்திருக்கும் அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களுக்கும் தான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜாடியை குலுக்கி, அகப்பையில் சிக்கும் எந்த மாவடுவையும் சுவைக்கலாம் என்பதுபோல், புத்தகத்தைப் பிரித்து, எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் படிக்கலாம். சுவைக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
ஜே.எஸ்.ராகவன்

About Author

1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக்

கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.

வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.

தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..

Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.

தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'

MORE BOOKS FROM THE AUTHOR - J.S. Raghavan

Gopikaikalum Jangirikalum

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Punnagai Varaali

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Comedy Cocktail

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Ellam Income Mayam

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Vari Variyaga Siri

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Kichu Kichu

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Yahoo Kalam

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Rating :

‘Jolly’ an wala ‘Bag’

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Sarida Saridi

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Kanna Mango Thinna Asaiya

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Ready Joot

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Thirumathi Thirupathi Crorepathi

Author: J.S. Raghavan

Genre: Humour

249.00 / $ 6.24

Be first to Write Review

Thamasha Varigal Part 2

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Thamasha Varigal Part - 1

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Sundal Chellappa

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Boogola Rambai

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Anbulla Sandaikozhiye!

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Sivasamiyin Sabatham Part - 2

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Sivasamiyin Sabatham Part - 1

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Rating :
Back To Top