மகா பெரியவா – தொகுதி 8 (Maha Periyavaa - Part 8)
Maha Periyavaa - Part 8 - Tamil eBook

Maha Periyavaa - Part 8

99.00 / $ 3.49

Author: P. Swaminathan

Language: All

Genre: Spiritual

Type: Articles

ISBN: N/A

Print Length: 130 Pages

Write a review

Bad Good

About Book

“இந்தக் கலியுகத்தில் தெய்வத்தை நேருக்கு நேர் தரிசிக்கக் கூடிய பாக்கியம்
உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?” என்று காஞ்சி மகா பெரியவாளை நேரில் தரிசித்த பக்தர்களிடம் கேட்டால், “ஆமாம்... அந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மகா பெரியவா திருவடிவத்தில் தெய்வத்தைத் தரிசித்திருக்கிறோம்” என்பார்கள், உணர்ச்சிவசப்பட்டு. ஆம்! காஞ்சி மகா பெரியவாளை நேருக்கு நேர் தரிசித்த பக்தர்கள் அனைவரும் சாட்சாத் சர்வேஸ்வரனையே கண்களுக்கு நேராகத் தரிசித்தவர்கள். அப்படி என்றால், மகா பெரியவாளை நேரில் தரிசிக்காதவர்கள் துர்பாக்கியசாலிகள் என்று பொருள் கொள்ளக் கூடாது! அந்த மகானை இன்றைக்கு நினைத்தாலும், மறைமுகமாக வந்து அருள் பாலிக்கிறார். அந்த வகையில் நாம் அனைவருமே பாக்கியசாலிகள்தான். அந்த வகையில் நானும் பாக்கியசாலிதான். ஆம்! என் நினைவுக்குத் தெரிந்து மகா பெரியவாளைத் தரிசித்ததில்லை. முன்ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறேனோ, என்னவோ... இன்று அவரைப் பற்றிப் பேசவும் எழுதவும் பேறு கிடைத்திருக்கிறது. கலியுக தெய்வம், நடமாடும் தெய்வம், கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் இன்றைக்குப் பக்தர்களால் பெரிதும் போற்றி வணங்கப்படுபவர் காஞ்சி மகா பெரியவா. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லப்படக் கூடிய வரிசையில் முதலிடத்திலும் (மாதா), மூன்றாம் இடத்திலும் (குரு) இருக்கிறவர்கள் கொட்டிக் கொடுக்கிறவர்கள். ஒரு குழந்தை தன் தாயிடம் என்ன கேட்டாலும், அன்பின் மிகுதியால் கொடுத்தே விடுவாள். கொடுக்க வேண்டாம் என்று அவள் நினைத்தாலும், தன் குழந்தை மேல் இருக்கிற வாஞ்சையும் கருணையும் கொடுக்க வைத்து விடும். அதுபோல்தான் நாம் வணங்குகிற குருவும். ஒரு குரு மகானின் சந்நிதிக்குச் சென்று அவரிடம் எதை வேண்டிப் பிரார்த்தித்தாலும், தகுதிக்கு உட்பட்டது என்றால், நிச்சயம் தந்து அருளி விடுவார் அவர். எனவேதான், கேட்டதை எல்லாம் கொடுக்கக் கூடிய குரு பக்தியானது உயர்ந்த பக்தியாகப் போற்றப்படுகிறது. அப்படி நாம் அனைவரும் கேட்டனவற்றை, வேண்டியவற்றை, பிரார்த்தித்தவற்றை உடனுக்குடன் அருளக் கூடிய - ஒப்பற்ற குருவாக இன்றைக்கும் விளங்கி வருகிறவர் காஞ்சி மகா பெரியவா. தன்னை நம்பி வந்து, தனது திருப்பாதங்களில் சரண் புகுகிற பக்தனை எந்த ஒரு காலத்திலும் ஏமாற்றியதில்லை மகா பெரியவா. ஒருவேளை பக்தன் கேட்டது உடனுக்குடன் கிடைக்கவில்லை என்றால், அவனது பக்தியில் போதிய வலிமை இல்லை என்று பொருள். ஷீர்டி பாபா, புட்டபர்த்தி சத்யபாபா போன்ற மகான்களின் வழிபாடு இன்றைக்கு உலகெங்கும் இருந்து வருவதைப் பார்க்கிறோம். அதுபோல் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளுக்கும் உலகெங்கும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. எண்ணற்ற யாத்திரைகள் செய்து, பக்தர்களுக்கு நல்வழிகளை உபதேசிப்பதுதான் சந்நியாச தர்மம். அதன்படி பாரத தேசத்தின் பெரும்பாலான ஊர்களில் யாத்திரை செய்து அவர்களுக்கெல்லாம் தன் இன்னருளை வழங்கி இருக்கிறார் மகா பெரியவா. காஞ்சி ஸ்ரீசங்கர மடத்திலோ, அல்லது தான் தங்கி இருக்கிற முகாமிலோ நித்தமும் ஸ்ரீசந்திரமவுளீஸ்வர பூஜையை நடத்துவார் மகா பெரியவா. காஞ்சி ஸ்ரீமடத்தில் ஆச்சார்யர்களாக இருக்கிற பீடாதிபதிகள் நித்தமும் இரு வேளைகளில் சிவ சொரூபமாக விளங்குகிற இந்த ஸ்படிக லிங்கத்துக்கு பூஜை நடத்த வேண்டும். ஆதி சங்கரர் கயிலாயத்தில் சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஸ்படிக லிங்கங்களுள் ஒன்றுதான் இந்த ஸ்ரீசந்திரமவுளீஸ்வரர். ஆத்மார்த்தமாக இந்த சிவலிங்க பூஜையை மகா பெரியவா தினமும் நிகழ்த்தும்போது, சாட்சாத் சிவபெருமான் தனக்குத் தானே பூஜையை செய்து கொள்வது போல் இருக்கும் என்று அவரது பக்தகோடிகள் சொல்வார்கள். இன்றைக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு செல்கிற பக்தகோடிகள் உள்ளே நுழைந்ததும், அங்கிருக்கிற பிரமாண்டமான பூஜை மண்டபத்தில் இந்த சந்திரமவுளீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மனதுக்குள் மகானைப் பரிபூரணமாகக் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால், உங்கள் உதடுகள் அசைவதே ஒரு மந்திரம்தான். ‘மகா பெரியவா சரணம்’ என்றோ, ‘ஜய ஜய சங்கர... ஹர ஹர சங்கர’ என்கிற நாமத்தையோ எவ்வளவு முடியுமோ சொல்லுங்கள்! குறைந்த பட்சம் 108 சொல்ல முயற்சியுங்கள்!

About Author

பி.சுவாமிநாதன், 04 நவம்பர் 1964ம் வருடம் பிறந்தார். சொந்த ஊர் திருப்புறம்பயம்

(கும்பகோணம் அருகில்). பட்டப் படிப்பு பி.எஸ்ஸி . (கணிதம்) கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும், எம்.ஏ. ஜர்னலிஸம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் 22 வருடமும் திரிசக்தி குழுமத்தில் 3 வருடமும் அனுபவம் உள்ளது.

ஆன்மிகச் சொற்பொழிவாளராக...
'பொதிகை' தொலைக்காட்சியில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் மகான்களைப் பற்றிய நிகழ்ச்சி (திங்கள் முதல் வியாழன் வரை - காலை 6.00 மணி முதல் 6.15 வரை). 1,000 எபிசோடுகளைக் கடந்த - நேயர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்.
'ஜீ தமிழ் தொலைக்காட்சி 'யில் 'அற்புதங்கள் தரும் ஆலயங்கள்' என்ற தலைப்பில் ஆலயங்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 6.30 மணி).
தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார். சொற்பொழிவுக்காகப் இவர் பல வெளிநாடுகளுக்கு பயனம் செய்துள்ளார். கனடா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரெய்ன், கத்தார், ஓமன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை என்று பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். அவற்றில் சில விருதுகள்:
- செந்தமிழ்க் கலாநிதி (திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது)
- சேஷன் சன்மான் விருது 2017
- குருகீர்த்தி ப்ரச்சார மணி (காஞ்சி காமகோடி பீடம்)
- குரு க்ருபா ப்ரச்சார ரத்னா (ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழு, துபாய்)
- சஞ்சீவி சேவா விருது (தாம்ப்ராஸ் காமதேனு டிரஸ்ட்)
- பக்தி ஞான ரத்னம் (ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குருஜி, ஆர்ட் ஆஃப் லிவிங், பெங்களூரு)
- ஆன்மீக தத்வ ஞான போதகர் (கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்)
- சத்சரித வாக்தேவம் (ஸ்ரீ மஹாசங்கரா கலாச்சார மையம், கோவை)

இதுவரை பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
- ஜீ தமிழ் தொலைக்காட்சி ('தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமை பற்றிப் பல காலம் தொடர்ந்து பேசியது)
- சன் நியூஸ் (நேரலைகள், விவாதங்கள்)
- விஜய் (பக்தி திருவிழா)
- மக்கள் டி.வி. (ஆலய தரிசனம்)
- ஜெயா (சிறப்பு விருந்தினர்)
- தந்தி டி.வி. (கும்பாபிஷேக நேரலை மற்றும் சொற்பொழிவுகள்)
- நியூஸ் 7 (ஆன்மிக நேரலை வர்ணனைகள்)
- வானவில் (மகான்கள் குறித்தான தொடர்)
- ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல்
- ஸ்ரீசங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்)
- மெகா டி.வி...

ஆன்மிக எழுத்தாளராக:
- தொடர்கள் வெளியான இதழ்கள்: ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கியப் பீடம், தின இதழ், காமதேனு, ஆதன் நியூஸ் உள்ளிட்டவை.
- தினமலர், காமதேனு (தி ஹிண்டு குழுமம்), ராணி, காமகோடி, ஆதன் நியூஸ் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார்.
- தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மிகக் கட்டுரைகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பொக்கிஷம் போன்ற இந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்: சுமார் 40-க்கும் மேல்

விற்பனையில் சாதனை படைத்த நூல்கள்:
- சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதத் தொகுப்பு)
- ஆலயம் தேடுவோம் (புராதனமான - சிதிலமான ஆலயங்களைத் தேடித் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுழுக்கு நடத்தி வைத்தது)
- மகா பெரியவா (இத்துடன் 10 தொகுதிகள்)
- திருவடி சரணம் (பாகம் ஒன்று, பாகம் இரண்டு)

MORE BOOKS FROM THE AUTHOR - P. Swaminathan

Shirdi Baba

Author: P. Swaminathan

Genre: Spiritual

174.00 / $ 4.99

Be first to Write Review

Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal

Author: P. Swaminathan

Genre: Spiritual

249.00 / $ 6.24

Be first to Write Review

Neengalum Saathikkalam

Author: P. Swaminathan

Genre: Self Improvement

174.00 / $ 4.99

Be first to Write Review

Azhagu Muruganin Aalayangal

Author: P. Swaminathan

Genre: Spiritual

174.00 / $ 4.99

Be first to Write Review

Maha Periyavaa - Part 10

Author: P. Swaminathan

Genre: Spiritual

249.00 / $ 6.24

Be first to Write Review

Maha Periyavaa - Part 9

Author: P. Swaminathan

Genre: Spiritual

99.00 / $ 3.49

Be first to Write Review

Maha Periyavaa - Part 7

Author: P. Swaminathan

Genre: Spiritual

99.00 / $ 3.49

Be first to Write Review

Maha Periyavaa - Part 6

Author: P. Swaminathan

Genre: Spiritual

99.00 / $ 3.49

Be first to Write Review

Maha Periyavaa - Part 5

Author: P. Swaminathan

Genre: Spiritual

99.00 / $ 3.49

Be first to Write Review

Maha Periyavaa - Part 4

Author: P. Swaminathan

Genre: Spiritual

174.00 / $ 4.99

Be first to Write Review

Maha Periyavaa - Part 3

Author: P. Swaminathan

Genre: Spiritual

174.00 / $ 4.99

Be first to Write Review

Maha Periyavaa - Part 2

Author: P. Swaminathan

Genre: Spiritual

99.00 / $ 3.49

Be first to Write Review

Maha Periyavaa - Part 1

Author: P. Swaminathan

Genre: Spiritual

324.00 / $ 7.49

Rating :
Back To Top