ஒப்பனைப் பூக்கள் (Oppanai Pookkal)
Oppanai Pookkal - Tamil eBook

Oppanai Pookkal

99.00 / $ 3.49

Author: Karumalai Thamizhazhan

Language: All

Genre: Social

Type: Poetry

ISBN: N/A

Print Length: 117 Pages

Write a review

Bad Good

About Book

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் நடத்திய குயில் ஏட்டை அவருக்குப்பின் திண்டிவனத்திலிருந்து

கவிஞர். கே.எம்.ஏ.வகாப் அவர்கள் நடத்தினார். அந்த ஏட்டில் கொடுக்கப்பட்ட வெண்பா ஈற்றடி "இயற்கை தமிழர்க் கிறை" அந்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாதான் (1969) அச்சில் வந்த என் முதல் கவிதையாகும். அந்தந்தக் காலக்கட்டங்களில் நிலவிய சூழ்நிலைகளுக்கேற்பப் பல்வேறு ஏடுகள் கொடுத்த ஈற்றடிகளுக்கு எழுதப்பட்டு வெளி வந்த வெண்பாக்களின் தொகுப்பே இந்தநூல். 1969 முதல் 1998 வரையிலான காலங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் பதிவுகளாக இந்த வெண்பாக்கள் திகழ்கின்றன.

இந்த நூலுக்கு வாழ்த்துரை நல்கிய பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. அரங்க. தெய்வமணி அவர்களுக்கும்,அணிந்துரை வழங்கிய தமிழ்ச்சான்றோர் பேரவைத்தலைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கும், கவிக் கொண்டல் ஏட்டின் ஆசிரியர் கவிஞர் மா. செங்குட்டுவன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன், கருமலைத்தமிழாழன்

About Author

கருமலைத்தமிழாழன் கிருட்டிணகிரியில் உள்ள கருமலை என்ற ஊரில் 16.07.1951ல் பிறந்தவர்.

இவர் புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்., ஆகியப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் மீதும் தனது ஊர்ப்பற்றின் மீதும் கொண்ட மிகுந்த காதலால் தனது இயற்பெயரான கி.நரேந்திரன் என்பதனை மறந்து இன்று கருமலைத்தமிழாழன் என்று அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் தமது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார்.

கருமலைத்தமிழாழன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியும் தமிழாசிரியர் பணியும் செய்துள்ளார். அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகள் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக சீரும் சிறப்போடும் பணியாற்றியுள்ளார்.

குயில், காஞ்சி, கண்ணதாசன், தமிழ்ப்பணி, முல்லைச்சரம், புன்னகை, காவியப்பாவை, தினத்தந்தி, தமிழ் இலெமுரியா, தினகரன், தினமணி, தினமலர், மாலைமுரசு, மாலைமலர், முரசொலி போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன. இதுவரை 22 கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன.

பல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலமாக 1.பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் 2.ஒட்டக்கூத்தர் 3.கவிதைச் செல்வர் 4.தமிழ்மாமணி 5.பாவேந்தர் நெறி செம்மல் 6.தமிழ் இலக்கியமாமணி 7.இலக்கியச்செம்மல் 8.இலக்குவனார் விருது 9.ஈரோடு தமிழன்பனார் விருது 10. வெண்பா வேந்தர் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Karumalai Thamizhazhan

Agamugam

Author: Karumalai Thamizhazhan

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Kalam Vellum Kalaignar

Author: Karumalai Thamizhazhan

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Suvadugal

Author: Karumalai Thamizhazhan

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Mannum Marabum

Author: Karumalai Thamizhazhan

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Nenjin Nizhalgal

Author: Karumalai Thamizhazhan

Genre: Literature

99.00 / $ 3.49

Be first to Write Review

Verin Vizhuthugal

Author: Karumalai Thamizhazhan

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review
Back To Top