சங்கதாரா (Sangathara)
Sangathara - Tamil eBook

Sangathara

324.00 / $ 7.49

Author: Kalachakram Narasimha

Language: All

Genre: Historical

Type: Novel

ISBN: N/A

Print Length: 399 Pages

Write a review

Bad Good

About Book

என்.டி. ராமராவை போலத்தான் கிருஷ்ணன் இருப்பார்! கே.ஆர். விஜயாவை போல்தான் அம்மன்

இருப்பாள்! சிவாஜி கணேசனை போல்தான் கட்டபொம்மன் இருப்பான் - என்று தாங்களாகவே இவர்களை உருவகப்படுத்திக் கொண்டு, உண்மையான இறை சொரூபம் தங்கள் முன் தோன்றினாலும், அவை தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொண்ட ரூபங்களுக்கு அப்பாற்பட்டு இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அம்மன் கே.ஆர். விஜயா போன்று இல்லை என்று நாம் சொன்னால், எதை ஆதாரமாக வைத்து இப்படிக் கூறுகிறீர்கள் என்று நம்மைக் கேட்டால், நாம் என்ன பதில் கூறமுடியும்!

பொன்னியின் செல்வன் படித்து சோழர்குல செம்மல்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று உருவகப்படுத்திக் கொண்டு விட்டவர்கள் பலர்! பத்மினியை குந்தவையாகவும், வைஜெயந்தி மாலாவை நந்தினியாகவும் இருத்தியிருக்கிறேன் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்! வக்கீல் என்றால் வரதாச்சாரி, க்ளப் டான்சர் என்றால் ரீட்டா, அடியாள் என்றால் ஜம்பு என்று தமிழ் திரையுலகம் நமக்கு போதித்து விட்டது! வரதாச்சாரி என்று அடியாள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! ஜம்பு, முனியன் என்று வக்கீல்கள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! இப்படிப்பட்ட வாசகர்களுக்காக சங்கதாரா எழுதப்படவில்லை.

சோழர் சரித்திரத்தில் துண்டு துண்டாக மர்மங்கள். சம்பவங்களுக்கு காரணகர்த்தா யார் என்று கூற இயலாதபடி அடுக்கடுக்காக பல நிகழ்வுகள்! இவற்றைக் கையாள பல எழுத்தாளர்கள் முன்வரவில்லை என்றே கருதுகிறேன். விஞ்ஞானம் உலகையே ஆளும் இன்று, MH-370 என்கிற மலேசிய விமானம் காணாமல் போய் விட்டது! விபத்து என்று கூற இயலாதபடி அதன் நொறுங்கிய உதிரி பாகங்களும் கிடைக்கவில்லை. விஞ்ஞானமும், பகுத்தறிவும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள இதே காலகட்டத்தில்தான், அமானுஷ்யமும், மர்மமும் வெற்றிகரமாக இன்னொரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் கூறுகிறேன்! சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலின், பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) ஆதித்த கரிகாலனின் கொலைதான்! பல எழுத்தாளர்களும், சரித்திரப் பேராசிரியர்களும் நுழைய மறுத்த இந்தப் பகுதிக்கு ‘சங்கதாரா’ என்னும் தோணியில் சென்றுவிட்டு, பத்திரமாக திரும்பி வந்திருக்கிறேன்.

விரைவில் இன்னும் பல சோழ மர்மங்களை விடுவிக்க எண்ணும்

அன்பன்,

‘காலச்சக்கரம்’ நரசிம்மா.

About Author

டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக

பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.

குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை tanthehindu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்

MORE BOOKS FROM THE AUTHOR - Kalachakram Narasimha

Moovidathu Vanaratham

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

49.00 / $ 1.99

Be first to Write Review

Anthapuram Pogathey, Arinjaya!

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

549.00 / $ 11.24

Rating :

Karna Parambarai

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

399.00 / $ 8.74

Be first to Write Review

Rangarattinam

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

249.00 / $ 6.24

Be first to Write Review

Kamadenuvin Mutham

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

324.00 / $ 7.49

Be first to Write Review

Athe Athe... Saba Pathe...

Author: Kalachakram Narasimha

Genre: Cinema

99.00 / $ 3.49

Be first to Write Review

Anniya Mannil Sivantha Mann

Author: Kalachakram Narasimha

Genre: Cinema

49.00 / $ 1.99

Be first to Write Review

Athimalai Devan - Part 5

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

549.00 / $ 11.24

Be first to Write Review

Athimalai Devan - Part 4

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

399.00 / $ 8.74

Be first to Write Review

Athimalai Devan - Part 3

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

549.00 / $ 11.24

Be first to Write Review

Sakalakala Babu

Author: Kalachakram Narasimha

Genre: Cinema

174.00 / $ 4.99

Be first to Write Review

Athimalai Devan - Part 2

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

474.00 / $ 9.99

Be first to Write Review

Pancha Narayana Kottam

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

549.00 / $ 11.24

Rating :

Kaadhalikka Neramillai Uruvana Kathai

Author: Kalachakram Narasimha

Genre: Cinema

174.00 / $ 4.99

Be first to Write Review

Athimalai Devan - Part 1

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

474.00 / $ 9.99

Be first to Write Review

Kuberavana Kaaval

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

249.00 / $ 6.24

Rating :

Kalachakram

Author: Kalachakram Narasimha

Genre: Thriller

249.00 / $ 6.24

Be first to Write Review
Back To Top