திருமதி லா.ச.ரா.வின் நினைவுக் குறிப்புகள் (Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal)
Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal - Tamil eBook

Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal

174.00 / $ 4.99

Author: Hemavathi Ramamirtham

Language: All

Genre: Social

Type: Articles

ISBN: N/A

Print Length: 223 Pages

Write a review

Bad Good

About Book

லா.ச.ரா. தனது அந்திம காலத்தில் மணிக்கொடி சிட்டி, இலக்கிய பீடம் விக்ரமன், வாசகர்
வட்டம் லஷ்மி கிருஷ்ணமூர்த்தியை சந்திக்க விரும்பினார்.

சிட்டியைப் பார்க்க நரசய்யாவே காரில் வந்து லா.ச.ராவை கூட்டிப் போய் சிட்டியை சந்திக்க வைத்து பின் - திரும்ப கொண்டு வந்து விட்டார். லஷ்மியை நான் சந்தித்த கதையை நான் இதில் எழுதி இருக்கிறேன்.

விக்ரமன் சாரை (என்னைவிட ஆறுமாதம் சிறியவர்) சென்று பார்த்து நெடுநேரம் பழைய கதைகள் பேசி கிளம்புகையில் எதேச்சையாக நான் டைரி எழுதுவதைப் பற்றிய பேச்சில் தொடர்ந்து முடிகையில்....

“அடடே! அதை ரிஷிகிட்டே கொடுத்தனுப்புங்கம்மா. நான் இலக்கிய பீடத்துல போடலாமான்னு பாக்கறேன்!"

"தமாஷ் பண்ணாதீங்கோ. இது டைரி. கட்டுரையோ, கதையோ போல சுவாரஸ்யமா இருக்கறதுக்கு. ‘ரா’வா இருக்கும். கார்ரே மூர்ரேன்னு மனசுலே தோணினதை தோணின படி எழுதியிருப்பேன். கேட்டதே சந்தோஷம்''

“எனக்கு போட்டதே சந்தோஷம்னு இருக்க வேண்டாமா?”

ஆமாம். ஆமாம். ஒத்துக்காதீங்கோ சார். “ஒரு தடவை அமெரிக்காவிலிருந்து ஸ்வல்லபெல் வந்து அப்பாவைப் பார்த்து சாப்பிட்டுவிட்டு போய் நல்லா இருக்குன்னு பாராட்டி சொன்னார்னு அம்மா டைரியில் எழுதி இருந்ததைப் படிச்சுட்டு ஸ்வல்லபெல் என்னை எப்போ சாப்பிட்டான்? அதுவும் நல்லா இருக்குன்னு பாராட்டி வேற சொன்னானா?ன்னு அதிர்ச்சி ஆக்ஷனோட சொல்ல அன்னிக்கு ரொம்ப தமாஷாயுடுத்து அருகிலிருந்த அனுகூல சத்ருரிஷியின் குரல்.

"கேலி பண்ணாதீங்கோ சார். அவர் என்ன எழுத்தாளரா அவருக்குன்னு ஒரு பாணி வெச்சுக்கறதுக்கு. அப்படியே இருந்தாலும் அவருக்கு தான் நடந்ததை அப்படியே சொல்ற பாணி இருக்கே. நீங்க அதை செம்மைப்படுத்தி கொடுங்கோளேன். வரிசை பிரகாரம் இருக்கணும்ங்கறதில்லை. எதை எதை நீங்க சுவாரஸ்யம்னு நினைக்கறேளோ அதை எல்லாம் எழுதி அனுப்புங்கோ. எனக்குத் தெரியாதா எதைப் போடணும்? போட வேண்டாம்னு. மத்த எழுத்தாளரோட மனைவி எல்லாரும் எழுதறாளா? லா.ச. ராவோட அறுபத்தி மூணு வருஷம் குடுத்தனம் நடத்தின உங்கம்மாவை எனக்கு ஐம்பது வருஷத்துக்கு மேலாய் தெரியும். நீங்க அனுப்பிவைங்கோம்மா.

வைத்தேன்.

ஜூலை 1ம் தேதி எங்கள் கல்யாணநாள். அக்டோபர் முப்பது அவர் பிறந்தநாள். ஜூலை மாதம் ஆரம்பித்த இந்தத் தொடர் அடுத்த வருடம் அக்டோபர் நிறைவு பெற்றது கூட அக்டோபர் முப்பது அன்று பிறந்தநாளன்றே அவர் மறைந்த நாளாகவும் ஆகிவிட்டதைப்போல ஒரு தற்செயல் நிகழ்வே. இதன்மூலம் நிறையப்பேரின் அன்பும், பாராட்டும், நட்பும், மரியாதையும் இத்தனை வயதுக்கு மேல் புதிது புதிதாகக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. 2017 ஜுன் 12 அன்று தொண்ணூறு வயதாகிறது. எத்தனை வயதானால் என்ன? அன்பு கசக்குமா என்ன?

லா.ச. ராவைப் பற்றி ‘படித்ததில் பிடித்தது’ என்கிற தலைப்பில் இதில் இடம் பெற்றுள்ள மூன்று கட்டுரைகளும் லா.ச.ராநூற்றாண்டிற்காக ‘சப்தரிஷி' எழுதினது. உங்களுக்கும் பிடிக்கும்

வேறு என்ன சொல்லப்போகிறேன்?

இதனை எங்கெங்கோ இருப்பவர்கள் படிக்கும் பொழுது அங்கங்கேயெல்லாம் லா.ச.ரா நினைவுகள் ஒரு வாஸனை போல கமழ்ந்து கொண்டிருப்பதை நான் இங்கிருந்துகொண்டே நுகர்ந்து மகிழ்வேன் என்பதைத் தவிர.

ஆசிர்வாதங்கள்

- ஹைமாவதி ராமாமிருதம்

About Author

அம்மாவிற்கு ஜூன்12 பிறந்தநாள். லாசராவுடன் 63 வருடங்கள் நிறைவு வாழ்க்கை. மளிகை

சாமான் கட்டி வந்த பேப்பரைக் கூட படித்துவிடும் ஆர்வம் கொண்ட அம்மாவிற்கு எழுத்தாளரே கணவர் ஆனது அவரது அதிர்ஷ்டம். அவர் மனைவி ஆனது லாசராவுக்கு அப்படியே. ஆரம்ப காலத்தில் அவருக்கு கதை எழுத படி எடுத்துக் கொடுத்தார் அவர். 70 வருடங்களாக டைரி எழுதுகிறார். அதுகூட அவருக்கு நன்மையாயிற்று. அமுத சுரபி விக்ரமன் அலரது டைரி குறிப்புகளை தன் இலக்கிய பீடத்தில் தொடராக வெளியிட்டார். அதனை விஜயா பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டது அந்த புத்தகத்தை வெளியிட்டவர் ஹைமாவதி ராமாமிர்தம் முதல் பிரதி வாங்கியவர் பாரதிமணி ஐயா. இதில் 3 சிறப்புகள் உள்ளன.

1. நூற்றாண்டு கண்ட விழா நாயகனின் மனைவி (நவீன தமிழ் கண்ட நூறுவருடங்களில்) பல மேடைகள் ஏறுவது. இவர்தான் முதல் பெண்மணி.

2 . 92 வயதினில் தமிழில் தன் முதல் படைப்பை வெளியிட்ட முதல் பெண்மணி.

3. தொண்ணூறு வயது பெண் எழுத்தாளரின் முதல் படைப்பின் முதல் ப்ரதியை பெற்றுக்கொள்ளும் 81 வயது காரரும் இந்த நிகழ்ச்சியில் தான்.

சாரு நிவேதிதா இவர் பற்றி எழுதும்போது இன்னும் வாழ்க்கையில் ஆர்வம் குன்றாமல் அலுப்பு இல்லாமலும் இருப்பதே இவரது வெற்றிக்கு காரணம் என்று கூறினார்.

Back To Top