உடலை வலுப்படுத்தும் யோகாசனங்கள் (Udalai Valupaduthum Yogasanagal)
Udalai Valupaduthum Yogasanagal - Tamil eBook

Udalai Valupaduthum Yogasanagal

49.00 / $ 1.99

Author: Surya

Language: All

Genre: Yoga

Type: Articles

ISBN: N/A

Print Length: 62 Pages

Write a review

Bad Good

About Book

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையாக உடல்வாகு இருப்பதால் முதன் முதலாக யோகா
கற்க விரும்புபவர்கள் ஒரு குருவின் மூலம் நேரடியாக பயிற்சி பெருவதுதான் கலையின் சிறப்பு. இந்நூல் படத்துடன் விளக்கியிருப்பதால் அனைவருக்கும் எளிதில் யோகா கலை பிடிபடும்.

சூர்ய நமஸ்காரம் என்பது நமது உடலின் பல்வேறு முக்கியமான மண்டலங்களாகிய சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம், தசை நார்கள், நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் மூளை உள்ளிட்ட புலன்களை வலிமையாக வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும்.

எட்டு வயதிற்கு மேற்பட்டு எண்பது வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு சாதாரண உடல்வாகுள்ள மனிதரும் இதனைச் செய்ய முடியும். இந்த சூரிய நமஸ்காரம் வளரும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பேரளவில் நன்மை பயக்கின்றது. தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வோருக்கு, கட்டுப்பாட்டுடன் கூடிய சீரான உடல் வளர்ச்சி, ஆரோக்கியத்துடன் கூடிய திறன்மிகுந்த உடல், அமைதியுடன் கூடிய சமநிலையான மனநிலை, ஆழ்ந்த கவனத்துடன் கூடிய கூடுதலான செயல்திறன், நினைவாற்றலுடன் கூடிய உணர்வுகளின் மீதான கட்டுப்பாடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.

About Author

சொந்தவூர் திண்டுக்கல். படிப்பு பி.காம். திண்டுக்கல்லில் தனியார் தொலைக்காட்சிகளில்
சமையல் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். தூர்தர்சன் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவரது சிறப்பு அம்சம் நவதானியங்களின் அடிப்படையில் சமையல் செய்வது. "சுவையான சமையல்கள்" "நவதானிய சமையல்" ஆகியவை இவர் எழுதிய நூல்கள்.
MORE BOOKS FROM THE AUTHOR - Surya

Annai Velanganni

Author: Surya

Genre: Travelogue

49.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top