வாழ்வில் வெற்றி (Vaazhvil Vetri)
Vaazhvil Vetri - Tamil eBook

Vaazhvil Vetri

99.00 / $ 3.49

Author: Dr.B. Jambulingam

Language: All

Genre: Social

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 148 Pages

Write a review

Bad Good

About Book

சிறுகதை எழுதுவதில் உள்ள சூழலை மனத்தில் வைத்து எழுதிய என்னுடைய முதல் கதை பிரசவங்கள்

என்பதாகும். ஆனால் அதற்குப் பின்னால் எழுதிய எதிரும் புதிரும் என்ற சிறுகதையே முதன் முதலாக 1993 இல் வெளியானது.

நம் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தவும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் சிறுகதைகள் முக்கிய காரணியாக அமைகின்றன. சிறுகதைகள் எழுத எனக்கு முழு ஆர்வத்தையும் ஆரம்பம் முதல் கொடுத்து வருபவர் நண்பர் முனைவர் க.அன்பழகன் அவர்கள். அவருக்கும், இந்த ஆர்வத்தைத் தூண்டிய மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய சிறுகதைகள் குங்குமம், பாக்யா, மாலைமுரசு, சாவி, கதைபூமி, மங்கையர் பூமி, இதயம் பேசுகிறது, தமிழ் அரசி, வாசுகி, மேகலா, உஷா, ராஜரிஷி உட்பட பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இந்த அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கதைகள் பல்வேறு காலகட்டத்தில் வந்ததால் நடையில் வேறுபட்ட சில மாற்றங்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒரே மாதிரி தொடர்ந்து வருவது, சில கதைகள் சிறிதாக அமைந்தமை, சில கதைகளில் ஆங்கிலச் சொற்களின் பிரயோகம் போன்றவை இதில் காணப்படுவதை உணரலாம். இது ஒரு குறையாகத் தோன்றினாலும் தொகுப்பாக வரும்போது இது தவிர்க்க முடியாததாகிறது.

அன்புடன், பா.ஜம்புலிங்கம்

About Author

முனைவர் பா.ஜம்புலிங்கம், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி

உதவிப்பதிவாளராக பணி நிறைவு பெற்றவர். சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998) பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

சிறுகதைத்தொகுப்பான வாழ்வில் வெற்றி (2001), மொழிபெயர்ப்புகளான மரியாதைராமன் கதைகள், பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), க்ளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் (2004) என்ற நூல்களைத் தனியாகவும், தஞ்சையில் சமணம் (2018) என்ற நூலை மணி.மாறன், தில்லை. கோவிந்தராஜன் ஆகியோராடு இணைந்தும் எழுதியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995) சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999) பெற்றுள்ளார். தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004) ஆகிய மலர் பதிப்புப்பணிகளில் உறுப்பினராக இருந்துள்ளார். 2003 புத்த பூர்ணிமாவின்போது வானொலியில் உரையாற்றியுள்ளார். 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 16 புத்தர் சிற்பங்களையும், 13 சமணர் சிற்பங்களையும் கண்டெடுத்துள்ளார்.

தமிழ் விக்கிபீடியாவில் 600+, ஆங்கில விக்கிபீடியாவில் 100+, சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 100+, முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூவில் 250+, நாளிதழ்கள் மற்றும் ஆய்விதழ்களில் 200+ கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Back To Top