வெற்றிக்கு 16 (Vetrikku 16)
Vetrikku 16 - Tamil eBook

Vetrikku 16

99.00 / $ 3.49

Author: Dr. Udhayasandron

Language: All

Genre: Self Improvement

Type: Articles

ISBN: N/A

Print Length: 84 Pages

Write a review

Bad Good

About Book

நீ எதை தேடிக் கொண்டிருக்கிறாயோ, அது ஏற்கெனவே உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது
என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. அப்படி தேடிக் கொண்டிருந்த பல புத்தகங்களைப் பற்றிய உற்ற தோழனைப் போல விவரிக்கும் ஓர் அன்புப் புத்தகத்தைத்தான் நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள்.

ஒரு நல்ல நூல் சிறந்த நண்பன் என்பார்கள். வெற்றிக்கு 16 என்ற இந்தப் புத்தகத்தின் மூலம் உங்களுக்கு பதினாறு நண்பர்கள் கிடைக்கப் போகிறார்கள். அதாவது 16 உலகப் புகழ் பெற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களைப் படித்த அனுபவம் கிடைக்கப் போகிறது. மேலும், பல காரணங்களால் படிக்கத் தவறிய அல்லது முழுமையாக படிக்காமல் விட்ட புத்தகங்களை மீண்டும் படிக்கும் ஆவலை என் எழுத்து தூண்டும் என நம்புகிறேன். ஆங்கிலத்தில் பல நூறு சுயமுன்னேற்ற நூல்கள் உள்ளன. உலகளவில் நாளும் பொழுதும் வந்து கொண்டும் இருக்கின்றன. இவற்றில் மிகப் பெரிய தாக்கத்தையும், விற்பனையில் புரட்சியையும், பலகோடி வாசகர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திய சுயமுன்னேற்றப் புத்தகங்களின் பட்டியலை உருவாக்கி, அவற்றின் உள்ளடக்கத்தை இரண்டே பக்கங்களில் எழுதுவது சவாலான பணிதான். அதனை சரியாகவே செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

உலகில் மாற்றங்களை விதைத்த அந்த அரிய நூல்களைப் பற்றி வாரந்தோறும் எழுதுவதற்கான வாய்ப்பு முன்னணி பத்திரிகையான புதிய தலைமுறை வார இதழ் மூலமாக கிடைத்தது. ஒவ்வொரு வாரமும் பல ஆயிரம் வாசகர்கள் பயனடைந்த அந்தத் தொடர்தான் உங்கள் கைகளில் ஒரு தொகுப்பாக தவழ்கிறது. புதிய தலைமுறையில் எழுத வாய்ப்பளித்த மதிப்பிற்குரிய ஆசிரியர் எம்.பி. உதயசூரியன், துணை ஆசிரியர் தளவாய்சுந்தரம் மற்றும் ஆசிரியர் குழுவுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒவ்வொரு வாரமும் எழுத பல ஆலோசனைகளையும், உற்சாகமும் வழங்கிய அன்பான மனிதர் சுந்தரபுத்தன், நூலாக்கம் செய்த நண்பர் சூரிய சந்திரன். அட்டை வடிவமைப்பு செய்த அண்ணன் ராஜா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் அதிரடி திருப்பங்களை உருவாக்கி, பெரும் உயரங்களைத் தொடவைத்த மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் புத்தகங்களைப் பற்றிய என் எழுத்தை வாசிக்கப் போகும் வாசகர்களாகிய உங்களுக்கு என் வாழ்த்துகள்.

பேரன்புடன்

உதயசான்றோன்

About Author

இன்றைக்கு இலட்சக்கணக்காண மக்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும்

ஒரு சர்வதேச இளம் தன்னம்பிக்கை பயிற்சியாளர் திரு. உதயசான்றோன், இவர் சிந்தனை சிற்பி உயர் திரு. உதயமூர்த்தி அவர்களின் மாணவர், ஆயித்துக்கும் மேற்பட்ட தலை சிறந்த நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும் முன்னணி பயிற்சியாளர்.

முன்னணி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மனிதவளத்தை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் பெரும் திறன் படைத்தவர். மனிதவளப் பயிற்சி வரலாற்றில் முதல்முறையாக 18 தலைப்புகளில் 72 மணி நேரம் தொடர்ந்து தொடர் பயிற்சிகள் வழங்கி சாதனை படைத்தவர்.

பயிற்சியாளர் என்ற முகத்தையும் தாண்டி சமூக சேவைகளில் பெரும் ஆர்வம் கொண்டவர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கிவருகிறார்.

தமிழக இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய சிந்தனையாளர் எம். எஸ். உதயமூர்த்தியிடம் 1996 – 2013 வரை 17 ஆண்டுகள் நட்புடன் பழகிய நல்மாணவர்.

ஒரு மாணவராக ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தியை எடுத்த நேர்காணல் இணைப்பு you tube ல் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற உலக நாடுகளுக்குச் சென்று பயின்றதோடு பயிற்சி அளித்த அனுபவமும் கொண்டவர்.

எம்.பி.ஏ., பட்டதாரியான உதயசான்றோன், மனித வளம் குறித்து பிஎச்டி ஆய்வில் பட்டம் பெற்றவர்.

பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் உதயசான்றோனின் பேட்டிகள், நம்பிக்கை உரைகள், மனநலம், நம்பிக்கை தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து இடம் பெற்றுவருகின்றன.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் பயிற்சிகளை வழங்குகிறார்.

‘எண்ணங்கள் தரும் அபார வெற்றி’, 'வெற்றிக்கு 16' என்ற வெற்றிகரமான நூலின் ஆசிரியர். 'உங்கள் எண்ணங்கள் தரும் அபார வெற்றி', 'நம்புங்கள், நீங்களும் கோடீஸ்வரர்தான்', 'உறுதியான வெற்றியை தரும் நேர மேலாண்மை' என்கிற மூன்று ஒலிப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரின் தொடர்புக்கு +91 91711 71473, udhayasandron@gmail.com

MORE BOOKS FROM THE AUTHOR - Dr. Udhayasandron

Ennangal Tharum Abaara Vetri

Author: Dr. Udhayasandron

Genre: Self Improvement

174.00 / $ 4.99

Be first to Write Review
Back To Top