Home / Audio Books / Maha Periava - Audio Book - Part 2
Maha Periava - Audio Book - Part 2 eBook Online

Maha Periava - Audio Book - Part 2 (மகா பெரியவா - ஒலிப் புத்தகம் - பாகம் 2)

About Maha Periava - Audio Book - Part 2 :

ஸ்ரீ மகா பெரியவாளின் பக்தர்கள் வாழ்வில் நடந்த 101 அற்புதங்களும் நிகழ்வுகளும். மகா பெரியவாளின் குரலே ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு அம்சம். இதில் இடம்பெற்றிருக்கும் சில பக்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். 25 மணி நேர ஒலிப்புத்தகம். இயக்கம் பம்பாய் கண்ணன் எழுதியவர் திரு P.சுவாமிநாதன் அவர்கள்.

About P. Swaminathan :

பி.சுவாமிநாதன், 04 நவம்பர் 1964ம் வருடம் பிறந்தார். சொந்த ஊர் திருப்புறம்பயம் (கும்பகோணம் அருகில்). பட்டப் படிப்பு பி.எஸ்ஸி . (கணிதம்) கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும், எம்.ஏ. ஜர்னலிஸம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் 22 வருடமும் திரிசக்தி குழுமத்தில் 3 வருடமும் அனுபவம் உள்ளது.

ஆன்மிகச் சொற்பொழிவாளராக...
'பொதிகை' தொலைக்காட்சியில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் மகான்களைப் பற்றிய நிகழ்ச்சி (திங்கள் முதல் வியாழன் வரை - காலை 6.00 மணி முதல் 6.15 வரை). 1,000 எபிசோடுகளைக் கடந்த - நேயர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்.
'ஜீ தமிழ் தொலைக்காட்சி 'யில் 'அற்புதங்கள் தரும் ஆலயங்கள்' என்ற தலைப்பில் ஆலயங்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 6.30 மணி).
தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார். சொற்பொழிவுக்காகப் இவர் பல வெளிநாடுகளுக்கு பயனம் செய்துள்ளார். கனடா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரெய்ன், கத்தார், ஓமன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை என்று பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். அவற்றில் சில விருதுகள்:
- செந்தமிழ்க் கலாநிதி (திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது)
- சேஷன் சன்மான் விருது 2017
- குருகீர்த்தி ப்ரச்சார மணி (காஞ்சி காமகோடி பீடம்)
- குரு க்ருபா ப்ரச்சார ரத்னா (ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழு, துபாய்)
- சஞ்சீவி சேவா விருது (தாம்ப்ராஸ் காமதேனு டிரஸ்ட்)
- பக்தி ஞான ரத்னம் (ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குருஜி, ஆர்ட் ஆஃப் லிவிங், பெங்களூரு)
- ஆன்மீக தத்வ ஞான போதகர் (கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்)
- சத்சரித வாக்தேவம் (ஸ்ரீ மஹாசங்கரா கலாச்சார மையம், கோவை)

இதுவரை பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
- ஜீ தமிழ் தொலைக்காட்சி ('தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமை பற்றிப் பல காலம் தொடர்ந்து பேசியது)
- சன் நியூஸ் (நேரலைகள், விவாதங்கள்)
- விஜய் (பக்தி திருவிழா)
- மக்கள் டி.வி. (ஆலய தரிசனம்)
- ஜெயா (சிறப்பு விருந்தினர்)
- தந்தி டி.வி. (கும்பாபிஷேக நேரலை மற்றும் சொற்பொழிவுகள்)
- நியூஸ் 7 (ஆன்மிக நேரலை வர்ணனைகள்)
- வானவில் (மகான்கள் குறித்தான தொடர்)
- ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல்
- ஸ்ரீசங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்)
- மெகா டி.வி...

ஆன்மிக எழுத்தாளராக:
- தொடர்கள் வெளியான இதழ்கள்: ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கியப் பீடம், தின இதழ், காமதேனு, ஆதன் நியூஸ் உள்ளிட்டவை.
- தினமலர், காமதேனு (தி ஹிண்டு குழுமம்), ராணி, காமகோடி, ஆதன் நியூஸ் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார்.
- தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மிகக் கட்டுரைகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பொக்கிஷம் போன்ற இந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்: சுமார் 40-க்கும் மேல்

விற்பனையில் சாதனை படைத்த நூல்கள்:
- சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதத் தொகுப்பு)
- ஆலயம் தேடுவோம் (புராதனமான - சிதிலமான ஆலயங்களைத் தேடித் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுழுக்கு நடத்தி வைத்தது)
- மகா பெரியவா (இத்துடன் 10 தொகுதிகள்)
- திருவடி சரணம் (பாகம் ஒன்று, பாகம் இரண்டு)

Chapter Details:
Chapter Name Chapter Duration
அட்சதையை ஏன் தரையில் போட்டார் 21:29
எழுந்திரு சீதே... எங்கே ராமன் 9:55
உணவும் கட்டுப்பாடும் 4:36
மணி சாஸ்திரிக்கு வந்த பிரசாதம் 20:15
ஆசிர்வதித்துக் கொடுத்த வேல் 28:04
அந்த பாட்டை ஏன் இங்கே பாடலை 28:10
சீதாப்பழம் குடுக்காம போறியே 06:53
தலைவலிக்கு மருந்து சொன்ன பெரியவா 09:37
அம்மா அனுப்பிய லெட்டர் 11:36
வீதிக்கே வந்தளித்த விஸ்வரூப தரிசனம் 27:28
தெரியறதா தெரியலை 10:19
காஞ்சிக்குப் போனார் சிக்கல் தீர்ந்தது 18:37
ஓரிருக்கையும் பாதுகா பிரதிஷ்டையும் 38:35
காப்பாற்றினார் மகா ஸ்வாமிகள் 16:05
கலங்க வைத்த காசி பயணம் 12:36
கனவில் ஆட்கொண்ட பெரியவா 10:50
எங்கே சாப்டே மடத்லயா....வெளீலயா 18:05
குழந்தைங்ககிட்ட சிடுசிடுக்காதே 04:49
குச்சி ஐஸ் வாங்கித் தரியா 04:37
ஒற்றை பார்சல் மறைந்த மர்மம் 21:25
அவசரம்னு சொல்லி ஆத்துக்கு அனுப்பு 11:33
யார் அனுப்பிய மணியாடர் 06:10
விளக்கு வைக்கறதுக்குள்ள கொண்டு சேர்க்கணும் 12:51
சாப்டூர் ஜமீன்தாரும் கலவை கலகலப்பும் 30:06
வயிற்று வலியை போக்கிய பகவான் 09:50
Rent For 30 Days
Write A Review

Author's Books