‘நான்’ என்று சொல்வது போலத் தமிழில் இதுவரை யாரும் சரித்திரக் கதை எழுதவில்லை என்பதால், அது மாதிரி ஒன்று நாமே எழுதினால் என்ன என்ற அசட்டுத் தைரியத்துடன் எண்ணத் தொடங்கினேன். ( வேறு இந்திய மொழியில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை) சேர, சோழ, பாண்டியர்களை வைத்து நிறையப் பேர் சிறப்பாக எழுதியிருப்பதால் அந்த வழிக்குப் போகாமல் வேறு சரித்திரங்கள் யோசித்தேன். மீரா, அக்பர், சிவாஜி என்று பலர் கண் முன் தோன்றினார்கள். கடைசியில் கிருஷ்ண தேவராயரைத் தேர்ந்தெடுத்தேன். தென்னிந்தியர்களின் சமூக, அரசியில், கலாசாரத் துறைகளில் விஜயநகரப் பேரரசு செலுத்திய செல்வாக்கைப் போல் வேறு எந்த ஆட்சியும் செய்யவில்லை. ஆகவே அவரைக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்தேன்.
- ரா. கி. ரங்கராஜன்
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா
Chapter Name | Chapter Duration |
---|---|
அத்தியாயம் ஒன்று | 22:00 |
அத்தியாயம் இரண்டு | 18:27 |
அத்தியாயம் மூன்று | 18:22 |
அத்தியாயம் நான்கு | 18:20 |
அத்தியாயம் ஐந்து | 25:32 |
அத்தியாயம் ஆறு | 18:46 |
அத்தியாயம் ஏழு | 19:01 |
அத்தியாயம் எட்டு | 17:51 |
அத்தியாயம் ஒன்பது | 19:19 |
அத்தியாயம் பத்து | 19:34 |
அத்தியாயம் பதினொன்று | 20:23 |
அத்தியாயம் பன்னிரண்டு | 15:12 |
அத்தியாயம் பதின்மூன்று | 21:18 |
அத்தியாயம் பதினான்கு | 17:11 |
அத்தியாயம் பதினைந்து | 18:04 |
அத்தியாயம் பதினாறு | 18:31 |
அத்தியாயம் பதினேழு | 18:17 |
அத்தியாயம் பதினெட்டு | 19:02 |
அத்தியாயம் பத்தொன்பது | 22:13 |
அத்தியாயம் இருபது | 20:28 |
அத்தியாயம் இருபத்து ஒன்று | 17:49 |
அத்தியாயம் இருபத்து இரண்டு | 17:35 |
அத்தியாயம் இருபத்து மூன்று | 19:55 |
அத்தியாயம் இருபத்து நான்கு | 18:56 |
அத்தியாயம் இருபத்து ஐந்து | 16:05 |
அத்தியாயம் இருபத்து ஆறு | 18:21 |
அத்தியாயம் இருபத்து ஏழு | 19:19 |