Aares (ஆரெஸ் )
About the Author
கதைகளை படிப்பதிலேயே நீண்ட நாட்களாக நேரத்தை செலவழித்து கொண்டிருந்தவனுக்கு ஏற்பட்ட திடீர் ஆர்வமே கதைகளை எழுதும் என்னுடைய இந்த முயற்சி ..முதல் முயற்சி ..
கதை என்றாலே கற்பனையின் வெளிப்பாடுதான். கதைகளில் சொல்லப்படும் இடங்கள், பெயர்கள் நிகழ்வுகள் ,முழுவதுமாகவே கற்பனை இல்லாமல் உண்மைக்கு அருகில் வருவதாக எழுதும்போது அதில் சுவாரஸ்யம் கூடுகிறது. பன்முக எழுத்தாளர் சுஜாதா அவர்களின் அனைத்து கதைகளும் இந்த வகையில்தான் இருக்கும்.
அவரது கதைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட ஊக்கத்தில் சற்றேனும் அவர் அருகில் வரமுடியுமா என்ற ஏக்கத்தில் எழுத முற்பட்டதே என் இந்த ஆக்கம்.
வாசகர்களின் ஆதரவை எதிர் பார்த்து என் இந்த பிரயாணத்தை தொடங்குகிறேன்.
நன்றி..