நூலாசிரியர் பரமசிவன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எம்.ஏ. தமிழ் படித்து முடித்துள்ளார். இவரது தந்தை அம்பை சங்கரன், தமிழ் வித்வான். பாரிமுனையில் உள்ள பச்சையப்பன் பள்ளியில் தலைமை தமிழாசிரியராக பணியாற்றி வந்தார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழக புலவர் குழுவில் இடம்பெற்றவர். 15க்கு மேற்பட்ட நூல்களை எழுதியும், 10க்கு மேற்பட்ட நூல்களுக்கு உரை எழுதியும், பல்வேறு நூல்களை தொகுத்து பதிப்பித்தும் உள்ளார்.
நூலாசிரியரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அருகிலுள்ள அம்பாசமுத்திரம். ஊரின் மீதுள்ள பற்று காரணமாக அம்பை சிவன் எனும் பெயரில் எழுதி வருகிறார். இவருக்கும் ஆனந்தவல்லி என்ற மனைவியும், சினேகா என்ற மகளும், சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர்.
1995-ம் காந்தளகம் பதிப்பகத்தில் பணிபுரிய தொடங்கினார். தொடர்ந்து மும்பை தமிழ் டைம்ஸ் நாளிதழ் ஆரம்பித்து விஜயபாரதம், தினகரன், தினமலர் என பல்வேறு நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் என 20 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.