எனக்கு எழுதும் பழக்கம் என் அப்பாவிடமிருந்து வந்தது என கூறலாம். என் அப்பா அசோகன் ஒரு அரசியல் விமர்சகர். தினமலர் நாளிதழ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் நிறைய கடிதங்கள் எழுதியுள்ளார். என் அம்மாவும் பத்திரிக்கைக்கு நிறைய துணுக்குகள் எழுதி இருக்காங்க. குடும்பதலைவி ஆகிய எனக்கு சிறுகதை, நாவல் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.
குமுதம், சிநேகிதி, ராணி, குடும்பமலர், தேவி, சாரல், குடும்ப நாவல், ராணி முத்து போன்ற பத்திரிக்கைகளில் என் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கிறது. எனது சில குறுநாவல்களும் வெளிவந்திருக்கின்றன.
கண்மணி இதழில் என் ஐந்து நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. அது எனக்கு மிக பெரிய ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.
என் நெருங்கிய தோழி கொடுத்த ஊக்கத்தாலும் தூண்டுதலிலாலும் ஒரு இங்கிலீஷ் நாவல் எழுதினேன்.
'மை லவ்' என்ற எனது இங்கிலீஷ் நாவல் போன வருடம் 2019 ல் வெளிவந்தது.
இதோ இன்று புஸ்தகா மூலம் எனது படைப்புகள் உங்கள் கைகளில் தவழ்கின்றன.
அன்புடன்,
அனிதா குமார்.