Home / Authors / Aruna Srinivasan

Aruna Srinivasan Tamil author

Aruna Srinivasan

About the Author

30 வருடங்களுக்கு மேல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சுயேச்சை பத்திரிகையாளராக இயங்கி வரும் அருணா ஸ்ரீநிவாஸன், இந்திய தினசரிகளான எக்கனாமிக் டைம்ஸ், பைனான்சியல் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், போன்ற செய்தித்தாள்களிலும், சிங்கப்பூரில் பிஸினெஸ் டைம்ஸ், தமிழ் முரசு போன்ற செய்தித்தாள்களிலும் இரு நாடுகளிலும் பல பத்திரிகைகளில் பத்திகளும் செய்திக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் சில பிரெஞ்ச், இத்தாலி மற்றும் சீன மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. திசைகள் மின்னிதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

ஆல் இந்தியா ரேடியோவில் காலை நிகழ்ச்சி தொடர் ஒன்று வழங்கியுள்ள இவரின் முதல் புத்தகம் பள்ளி மாணவர்களின் பொது வாசிப்புக்காக Portrayel of Women in Tamil Fiction எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு ஆய்வு நூல். National Council for Educational Research and Training அமைப்பின் வெளியீடு. இரண்டாவது புத்தகம், ஒரு பெண் பஞ்சாயத்து தலைவரின் போராட்டங்கள் பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்பு. அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31, இவரது மூன்றாவது புத்தகம்.

தற்போது இவர் வசிப்பது சென்னையில்.

eBooks