Bhanumathy Venkateswaran
About the Author
பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் திருச்சியில். திருமணத்திற்கு பிறகு ஓமானில் அரசுப் பணியில் இருந்திருக்கிறார்.
சிறு வயது முதலே விளையாட்டை விட புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு அதிகம். பின்னர் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டு பதின்ம வயதிலேயே எழுத தொடங்கி விட்டாராம். பிரபல பத்திரிகைகளில் துணுக்குகள், கவிதைகளில் தொடங்கி, மங்கையர் மலரில் ஒரு குறுநாவல் வரை இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஏறத்தாழ பத்து வருடங்களாக வலைப்பூ வில் எழுதி வருகிறார். சமீபத்தில் யூ ட்யூப் சானல் துவக்கி, ஆன்மீக, பொது விஷயங்களை பேசி வருகிறார்.