பாரதிசந்திரன், தமிழ்ப் பேராசிரியராகச் சென்னையிலுள்ள கல்லூரியில் இருபத்தியோரு ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். படைப்பு உலகிலும், ஆய்வு உலகிலும் பரந்துபட்டப் பதிவுகளை இணையத்தின் வாயிலாகவும் நூல்களின் வாயிலாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாட்டுப்புறவியல்ஆய்வு என இவரின் படைப்புலகம் செல்கிறது. இணையத்தில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். சிற்றிதழ்கள் குறித்த ஆராய்ச்சியாளர், சிற்றிதழ் சேகரிப்பாளர்.
"நவீன தமிழும், சிற்றிதழ்களும்," "தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்" "படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்", "சமயம் இணக்கமும் மேம்பாடும்" "அத்வைதம் ஓர் அறிமுகம்" "நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்" எனும் ஆறு நூல்களை எழுதியுள்ளார். எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளைச் சிற்றிதழ்கள் சார்பாக எழுதி வருகின்றார். இவரின் கவிதை, திருப்பூர் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகளாவியக் கவிதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு "குலவை" எனும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.. மூன்று வலைப்பூக்களை உருவாக்கி அதில் எழுதியும் வருகிறார். "நவீன தமிழும் சிற்றிதழ்களும்" எனும் நூலுக்குக் 'காரைக்குடித் தமிழ்ச்சக்தி அமைப்பு' சிறந்த நூலுக்கானப் பரிசை நல்கியது குறிப்பிடத்தக்கதாகும்.