ஆர்.சி. நடராஜன் பொருளாதாரத்திலும் நிர்வாகத்துறையிலும் முதுகலை முடித்து, நிர்வாகத்துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.
பதினைந்து ஆண்டுகள் ஆவின், டால்மியா மற்றும் அமுல் போன்ற பால்வள நிறுவனங்களில் மேலாளராக பணிபுரிந்து, பின் கல்வித்துறைக்கு மாறி மணிப்பால், IIM Indore போன்ற நிர்வாகக் கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகவும் இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நகைச்சுவையாக எழுதுவதும் பேசுவதும் இவருக்கு கைவந்த கலை.