Hemavathi Ramamirtham
About the Author
அம்மாவிற்கு ஜூன்12 பிறந்தநாள். லாசராவுடன் 63 வருடங்கள் நிறைவு வாழ்க்கை. மளிகை சாமான் கட்டி வந்த பேப்பரைக் கூட படித்துவிடும் ஆர்வம் கொண்ட அம்மாவிற்கு எழுத்தாளரே கணவர் ஆனது அவரது அதிர்ஷ்டம். அவர் மனைவி ஆனது லாசராவுக்கு அப்படியே. ஆரம்ப காலத்தில் அவருக்கு கதை எழுத படி எடுத்துக் கொடுத்தார் அவர். 70 வருடங்களாக டைரி எழுதுகிறார். அதுகூட அவருக்கு நன்மையாயிற்று. அமுத சுரபி விக்ரமன் அலரது டைரி குறிப்புகளை தன் இலக்கிய பீடத்தில் தொடராக வெளியிட்டார். அதனை விஜயா பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டது அந்த புத்தகத்தை வெளியிட்டவர் ஹைமாவதி ராமாமிர்தம் முதல் பிரதி வாங்கியவர் பாரதிமணி ஐயா. இதில் 3 சிறப்புகள் உள்ளன.
1. நூற்றாண்டு கண்ட விழா நாயகனின் மனைவி (நவீன தமிழ் கண்ட நூறுவருடங்களில்) பல மேடைகள் ஏறுவது. இவர்தான் முதல் பெண்மணி.
2 . 92 வயதினில் தமிழில் தன் முதல் படைப்பை வெளியிட்ட முதல் பெண்மணி.
3. தொண்ணூறு வயது பெண் எழுத்தாளரின் முதல் படைப்பின் முதல் ப்ரதியை பெற்றுக்கொள்ளும் 81 வயது காரரும் இந்த நிகழ்ச்சியில் தான்.
சாரு நிவேதிதா இவர் பற்றி எழுதும்போது இன்னும் வாழ்க்கையில் ஆர்வம் குன்றாமல் அலுப்பு இல்லாமலும் இருப்பதே இவரது வெற்றிக்கு காரணம் என்று கூறினார்.