இதுதான் இவனது ஃபேஸ்புக் பெயர். சுருக்கமாக John.
இவன் யார்?
நிறைய ஃபேஸ்புக் நண்பர்களுக்கு அன்புள்ள அண்ணன். நல்லதொரு நண்பன்.
அரசு ஓவிய கலைக் கல்லூரியில் ஒரு காலத்து மாணவன்.
வாழ்க்கையில் பல விஷயங்களில் இன்னமும் மாணவன். ஆம். கற்றது கையளவு.
விளம்பர ஆலோசகன். குறும்பட இயக்குனன்.
தொலைக்காட்சித் துறையையும், திரைப்படத் துறையையும் தொட்டுக் கொண்டிருப்பவன்; சில சமயம், தொடர்ந்து செல்பவன். ஆனால், தொலைந்து போகிறவன் அல்ல.
எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையுமே மனதில் கொண்டிருப்பவன்.
ஃபேஸ்புக் மூலம் அரிய நட்புகளைக் கூட அடைய முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருப்பவன்.