நான் 68 வயதான நுண் கருவியியல் பொறியாளன் . ( instrumentation Engineer) அமரர் திரு அப்துல் கலாம் மற்றும் அமரர் திரு சுஜாதா படித்த சென்னை தொழில் நுட்பக் கல்லூரியில் (MIT) தொழில் நுட்பம் பயிலும் பேறு பெற்றவன்.
45 வருஷங்களாக தொழில் நுட்பத்துறையில் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் பணி புரிந்து , தற்போது சென்னையில் வசிக்கிறேன் .
கல்கி, தேவன், தி. ஜானகிராமன், ல. சா. ரா, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்ரன், கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, எஸ். ஏ. பி, ரா. கி. ரங்கராஜன், சாண்டில்யன், ரா. சு. நல்ல பெருமாள், ராஜம் கிருஷ்ணன், நா. பார்த்தசாரதி, சுஜாதா, பாலகுமாரன் மற்றும் இது போன்ற பல மேதைகளின் கதைகளுடன் சிறு வயதிலிருந்து வளர்ந்ததினால் எழுதும் ஆசை எனக்கு என்றும் உண்டு.
கடந்த சில வருஷங்களாக சில சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் ஊக்குவித்தலாலும், கதைகளைப் படித்தவர்கள் தந்த ஆதரவாலும் உந்தப்பட்டு "தாமிரபரணிக் கரையினிலே" என்ற சிறுகதைத் தொகுப்பை "புஸ்தகா" மூலம் வெளியிட்டுள்ளேன்.
என் பிறந்த ஊரான திருநெல்வேலியின் பக்கத்து கோடகநல்லூரின் பின்புலத்திலும் சில கதைகள் எழுதியுள்ளேன்.
நன்றி.