Kalki Kaviyarasu (கல்கி கவியரசு)
About the Author
கல்கி கவியரசு பிறந்த ஊர் கோவை மாவட்டம். ஆசிரியராக இருந்து பிறகு தொழில் துறையில் இருந்த ஆர்வ மிகுதியால் தொழில் துறையில் ஈடுபட்டு வருகிறேன். எழுத்தின் மீது இருந்த பற்று காரணமாக குறும்படம், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை, அரசியல் விமர்சனம் என நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.
அது மட்டுமல்லாது சிறுவர், சிறுமியர். பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சமூக விழிப்புணர்வு கருத்தரங்கங்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடத்தி வருகிறேன்.
மலைவாழ் கிராமங்கள் பழங்குடியின மக்கள் என பலதரப்பட்ட மக்களுக்கு சமூகம் சார்ந்த பங்களிப்பில் உதவி செய்து வருகிறேன். மேலும், சாலை விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட குறும்படங்கள் சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் என படைப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.2007 முதல் கவிதை, கட்டுரை என எழுதத் துவங்கியது முதல் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.
சிறந்த வளரும் தொழில் முனைவருக்கான விருது 2017 ஆம் ஆண்டு வழங்கியிருக்கிறார்கள்.
சிறந்த பன்முகக் கவிஞர், எழுத்தாளர் என்ற விருதை பிரஸ் மீடியா அசோசியேஷன் மூலம் வழங்கியிருக்கிறார்கள். இதுவரை அரசியல் விமர்சனம், விழிப்புணர்வு கட்டுரை என பலவற்றை எழுதிய நான் எனது முதல் கவிதை நூலாக நெடுவாழியை பதிவு செய்கிறேன்.