தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.
கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன், கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம், இராமநாதம் முதலிய எட்டு நூல்களின் ஆசிரியர்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும், தஞ்சாவூர் ரோட்டரி சங்கத்தின் மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினையும் பெற்றவர்.