Karumalai Thamizhazhan
About the Author
கருமலைத்தமிழாழன் கிருட்டிணகிரியில் உள்ள கருமலை என்ற ஊரில் 16.07.1951ல் பிறந்தவர். இவர் புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்., ஆகியப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் மீதும் தனது ஊர்ப்பற்றின் மீதும் கொண்ட மிகுந்த காதலால் தனது இயற்பெயரான கி.நரேந்திரன் என்பதனை மறந்து இன்று கருமலைத்தமிழாழன் என்று அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் தமது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார்.
கருமலைத்தமிழாழன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியும் தமிழாசிரியர் பணியும் செய்துள்ளார். அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகள் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக சீரும் சிறப்போடும் பணியாற்றியுள்ளார்.
குயில், காஞ்சி, கண்ணதாசன், தமிழ்ப்பணி, முல்லைச்சரம், புன்னகை, காவியப்பாவை, தினத்தந்தி, தமிழ் இலெமுரியா, தினகரன், தினமணி, தினமலர், மாலைமுரசு, மாலைமலர், முரசொலி போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன.
இதுவரை 22 கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன.
பல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலமாக 1.பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் 2.ஒட்டக்கூத்தர் 3.கவிதைச் செல்வர் 4.தமிழ்மாமணி 5.பாவேந்தர் நெறி செம்மல் 6.தமிழ் இலக்கியமாமணி 7.இலக்கியச்செம்மல் 8.இலக்குவனார் விருது 9.ஈரோடு தமிழன்பனார் விருது 10. வெண்பா வேந்தர் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.