பத்தாம் வகுப்பு படிக்கும் போதே 12.12.1978இல் கடலூரில் செந்தமிழ் இலக்கிய மன்றத்தை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான இலக்கியப் பெருவிழாக்கள் நடத்தியவர்.
16.12.1979 செந்தமிழ் மன்ற முதல் மாநாடு சிறப்பாக நடத்தி மாநாட்டு ஆய்வுமலர் வெளியிட்டும், புகழ்மிகு தமிழறிஞர்களுடன் தமிழ்ப்பணி புரிந்தவர்.
பதினோராம் வகுப்பு பயிலும் போது கடலூரில் சங்க இலக்கிய மாநாட்டை புகழ்மிகு தமிழ்ப் பேரறிஞர்களைக் கொண்டு 9 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தியவர். 32 ஆண்டுகள் தமிழாசிரியப் பணியாற்றியவர். மூன்று முறை நல்லாசிரியர் விருது பெற்றவர். முதிய அகவையிலும் தளராத தமிழ் தாகம் கொண்டவர்.
மாநில அளவில் தமிழ்த்தென்றல் விருதும் வழங்கி இவரது வாழ்க்கை வரலாற்றை புதுக்கோட்டை தமிழ் இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ளது. இவர்தம் தொலைக்காட்சி சொற்பொழிவுகள் மிகவும் புகழ்மிக்கவை. இவருடைய பாடல்கள் கடலூர் கோவில் ஒன்றில் பெரிய அளவில் செதுக்கப்பட்டுள்ளது.