அனைவருக்கும்
என் அன்பு வணக்கங்கள்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலமே நான் பிறந்த ஊராகும். பல ஆண்டுகளாய் ஆசிரியப்பணி. அதன் அடுத்த பரிணாமமே என்னை, எழுத்தாளராய் மாற்றியது. பெரும்பாலும் எனது கதைகள் உண்மைச் சம்பவத்தின் ஊடே பின்னப்பட்டிருக்கும். எனது கணவரின் இசைவோடு தொடங்கிய என் எழுத்துப்பயணம், தெளிந்த நீரோடையாய்ச் சென்று கொண்டிருக்கிறது.
மனித மனங்களில் “தாக்கத்தை” ஏற்படுத்தும் “வல்லமை” கதைகளுக்கு உண்டு என்பதை, அனுபவப்பூர்வமாய் உணர்ந்தேன். எனவே, கற்பனைகளை விட வார்த்தைகளை தேர்வு செய்யவே முக்கியத்துவம் தருவேன் எனது கதைகளில்…!
நூல்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து வந்த நான் இனி மின்நூல் வழியாய் சந்திக்க விழைகிறேன். எனது படைப்புகள் உங்களுக்குத் தென்றலாய் இதம் தரும். என்ற ‘நம்பிக்கையில்...!’ எனக்கு இந்த நல்வாய்ப்பை நல்கிய “புஸ்தகா” நிறுவனத்தாருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் – வாழ்த்துகளும்...!
உயர்வான உங்களின் கருத்துகள் என்னை மேலும், ‘சீர்படுத்த’ உதவும் என்ற நம்பிக்கையில், அவற்றை எதிர்நோக்குகிறேன்...! எனது எனது மின்னஞ்சல் முகவரி: உங்களின் விமர்சனங்களை அனுப்ப kavithaeswarankavithaeswaran @gmail.com