Kaviyogi Vedham (கவியோகி வேதம்)
About the Author
கவியோகி வேதம் அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவர் கதை, கவிதை மற்றும் யோகாசான முறைகள் பற்றியும் பல நூல்களை வெளியுட்டுள்ளார். இவரின் "எளிய யோகாசன முறைகள்" வெளியிடப்பட்டு 35,000 பிரதிகள் விற்றுள்ளன. 250க்கும் மேல் இவரது கவிதைகள் கல்கி, ஆநந்த விகடன், கலைமகள், அமுதசுரபி, கோபுர தரிசனம், அம்மன் தரிசனம் போன்ற பிரபல ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவர் கானடாவில் "சித்தர்களும் என் வாழ்க்கையில் யோக அனுபவமும்" என்கிற சொற்பொழிவும் மற்றும் சிங்கப்பூரில் "சமுதாயமும் கவிஞர்களின் பங்களிப்பும்" என்கிற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதுவரை சுமார் 300 பேர்களுக்கு தீவிர தியானம், யோகாசனம், ப்ராணிக் ஹீலிங்க் போன்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சிகள் அளித்துவருகின்றார்.