Klik Ravi
About the Author
ஒரு போட்டோகிராபராக, பத்திரிக்கையாளனாக இயங்கியபோது எனக்குக் ‘க்ளிக் ரவி’ என்ற பட்டப்பெயரை அளித்தவர் திரு. லேனா தமிழ்வாணன். அவருக்கு எனது முதல் நன்றி!
சுமார் 300 பிரபலங்களை சந்தித்து அவர்களை நேர்காணல் செய்து கூடவே படங்களையும் எடுத்துள்ளேன். அவை கலைமகள், அமுதசுரபி, கல்கி, மங்கையர் மலர், சக்தி விகடன், பாபாஜி ஆன்மிகம் இப்படிப் பல இதழ்களில் வெளி வந்தன. வந்து கொண்டுமிருக்கின்றன. ஆனால் அடிப்படையில் சிறுகதை, நாவல்கள் எழுதுவதில்தான் நான் ஆர்வம் கொண்டிருந்தேன். அதற்கான காலம் இப்போதுதான் கனிந்திருக்கிறது.
தி.,ஜானகி ராமன், ஜெயகாந்தன், கண்ணதாசன், லா.ச.ரா- (லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்), ரா.கி.ரங்கராஜன், பாக்யம் ராமசாமி, சுஜாதா என அத்தனை எழுத்தாளர்களின் படைப்புகளையும் தேடித்தேடிப் படித்திருக்கிறேன். இந்த வாசிப்பினால் எழுந்த தாக்கம் காரணமாக இதுவரையில் சுமார் ஐம்பது சிறுகதைகள் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். கலைமகள், சுப மங்களா இதழ்கள் நடத்திய போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளேன்.
எனது புத்தகங்கள் pustaka.co.in வழியாக மின் நூலக வாசகர்களுக்கு அறிமுகமாகின்றன. மகிழ்ச்சி. நமது நட்பும், உறவும் தொடரட்டும்.
தொடர்ந்து இந்த மேடையில் சந்திக்க இறையருள் துணை நிற்கட்டும்.
அன்புடன்
க்ளிக் ரவி (என்றறியப்படும்) ஸ்ரீ ரவிச்சந்திரன்