Mala Madhavan (மாலா மாதவன்)
About the Author
சென்னையைச் சேர்ந்தவர். படிப்பு: MCA. சில காலம் பணி செய்து தற்போது இல்லத்தரசி.
தமிழார்வம் உண்டு. கவிதைகள், கதைகள் என எழுதி வருகிறார்
ஆண்டாளைப் பற்றி வெண்பா வடிவில் இவர் கொண்டு வந்த நூல் " பாவை". ஸ்ரீமான் சந்தக்கவி ராமசாமி அவர்கள் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
பைந்தமிழ்ச்சோலை என்ற குழுவில் ஐயா பாவலர் மா.வரதராசன் கீழ் பயின்று பைந்தமிழ்பாமணி என்ற பட்டமும் வாங்கி உள்ளார்.
முதல் சிறுகதையான விருட்ச விதைகள் தினமலர் வாரமலரில் வெளி வந்தது.
இயற்கை என்னும் கவிதை ராணி இதழில் வெளி வந்துள்ளது.
தவிர சில சிறுகதைகள் இணைய மின்னிதழ்களில் வெளி வந்துள்ளன.
ஆலம்பாடி காளி என்ற பாடல் யூ-டியுபில் வெளிவந்து இருக்கிறது.