சென்னையில் பிறந்த நேசா தமிழ் இலக்கியத்தில் பட்டமும், மனோதத்துவத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். தன் இரண்டு மகன்கள் படித்து பொறியியல் கல்லூரிக்கு செல்லவும், கணவரின் தொழிற்சாலைக்கு கணினியில் வடிவமைப்பாளராக உதவி வந்தவரின் ஓய்வு நேரத்தில் தமிழின் மீதிருந்த ஆர்வத்தால் இணையதளத்தில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதியிருக்கும் இவர் அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கும் முதல் நாவல் இந்த அண்ணாச்சிமா.