Radha Narasimhan
About the Author
ராதா நரசிம்மன், பெங்களூர் வாசி... பிடித்தது, படித்தது தமிழ். பெங்களூர் "பாரத் எலக்ட்ரானிக்ஸ்" இல் 40 வருட சர்வீஸ் முடித்து, ,வெளிவந்த பொழுது மனம் நிறைவைத் தந்தது.
எழுத்தின் மேல் ஆர்வ மிகுதியால், கட்டுரைகள் கதைகள் எழுதி "மங்கை மலர்" "குமுதம் சினேகிதி" "அவள் விகடன்" ஆனந்த விகடன் போன்ற பல பிரபல அனுப்ப ...அடுத்தடுத்து.... பிரசுரசமானதில் மிகுந்த மகிழ்ச்சியும் ஈடுபாடு அதிகரித்தது.
வேலையில் இருந்தபோது தமிழ் சங்கத்தின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது, "குமுதம் சிநேகிதி மகளிர் கொண்ட்டத்தை முன்னின்று பெங்களூரில் நடத்தியது, "மங்கையர் மலரின், வெள்ளி விழாவில் முக்கிய பங்கு வகித்தது,பத்திரிகைகள், நடத்திய போட்டிகளில் நடுவராக இயங்கியது... என இன்னும் பல, என் சுறு சுறுப்பை அதிகப் படுத்தியது.
"கூட்டுக் குடும்ப வாழ்க்கை" மிக ரசித்த நகைச்சுவை உரையாடல், நிகழ்வு, பல வெளிநாடுகளுக்குச் சென்று ரசித்த பயண அனுபவக் கட்டுரைகள். வாழ்க்கை அனுபவித்து ரசித்து வாழ வேண்டும் எனும் எண்ணம் எனக்கு, அதை உங்களுடன் பகிரும் ஆசை....
ஏனெனில் எனக்கு இந்த உலகை, மனிதர்களை மிகப் பிடிக்கும்.