திரு. எஸ். சேகு ஜமாலுதீன், இவர் 4.2.1956-இல் பிறந்தார். சென்னைப் புதுக்கல்லூரியில் பயின்று, 1978-இல் பி.காம். பட்டம் பெற்றார்.
ஆவடி, ஆலிம் முகமது சாலேஹ் கல்விக்குழுமத்தின் செயலாளர் மற்றும் தாளாளராகவும் திறம்படப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
சிறந்த பொறியியல் கல்லூரியின் விருது எனத் தம் செயல்திறனுக்காக இவர் பல விருதுகளைப் பெற்றுள்ள கல்வியாளர் ஆவார்.
பொதிகை, நியூஸ் 7, கலைஞர் தொலைக்காட்சிகளில் நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார்.
"முல்லைச் சரம்", "கவிதை உறவு" மற்றும் ஆலந்தூர் "கோ.மோகனரங்கம் பவுண்டேசன்" போன்ற பல இலக்கிய அமைப்புகளுடன் தொடர்புடையவர். பல்வேறு நூல் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்று, சிறப்புரை நல்கியவர்.
முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று இயன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்துவரும் சமூகப் பணியாளரும் ஆவார்.
துபாய், சவுதி அரேபியா, தாய்லாந்து, இலங்கை, ஹாங்காங், சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குக் பயணம் மேற்கொண்ட சிறப்பும் இவருக்குண்டு.