வணக்கம். நான் ஷிவானி செல்வம். நான் தமிழகத்தில் மண் மணமிக்க மதுரையில் வசிக்கிறேன். புத்தகங்கள் வாசிப்பதென்றால் எனக்கு அலாதி பிரியம். அந்த தாக்கத்தில் எழுத்துலகிலும் நுழைந்து விட்டேன். நான் இதுவரையில் நிஜமது நேசம் கொண்டேன், காதலா! காதலா!, நின் உச்சிதனை முகர்ந்தால், காதலாற்றுப்படை என நான்கு குடும்ப நாவல்களை எழுதியுள்ளேன். வாசகர்களின் ஊக்கத்தில் மேலும் மேலும் முன்னேறி கொண்டிருக்கிறேன். ஆகையால் என்றும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாகிறேன்.