Shylaja
About the Author
இவரது இயற்பெயர் - மைதிலி நாராயணன்.
இவர் இதுவரை 250சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் இணையத்தில் கல்கியின் அலை ஓசை நாவல் குரல் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இவரது பல சிறுகதைகள் பரிசு பெற்றவை:
ஆனந்தவிகடன் பவழவிழாவில் படக்கதைப் போட்டியில் 30000 ரூ பரிசு.
அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு.
அமுதசுரபியில் சின்னிக்ருஷ்ணன் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு.
இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி ஆறுதல் பரிசு.
இலக்கியபீடம் அமரர் ரங்கநாயகி நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு.
தினமலர் சிறுகதைப் போட்டி ஆறுதல் பரிசு.
லேடீஸ் ஸ்பெஷல் சிறுகதைப் போட்டி ஆறுதல் பரிசு.
கலைமகள்.. கிவாஜ சிறுகதைப்போட்டி சிறந்த சிறுகதைப் பரிசு.
கலைமகள்.. ரசவாதி நினைவுச் சிறுகதைப் போட்டி இரண்டாம் பரிசு.
மஞ்சரி... அமரர் தேவன் நினைவுப் பயணக் கட்டுரை இரண்டாம் பரிசு.
பொதிகை தொலைகாட்சி பொங்கல் தின சிறந்த விமர்சனக் கட்டுரைக்கு இரண்டாம் பரிசு.
இணையதளங்கள் - தமிழுலகம் நடத்திய தொடர்கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
அன்புடன் குழுமத்தில் ஒலிக்கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
மற்றும் பல பரிசுகள் இவர் பெற்றுள்ளார்.
இவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.