Home / Authors / Silambarasi Rakesh

Silambarasi Rakesh Tamil author

Silambarasi Rakesh (சிலம்பரசி ராக்கேஷ்)

About the Author

நான் சிலம்பரசி. என் பூர்வீகம் மதுரை.. ஆனால் வளர்ந்தது சென்னையில்.. College of Engineering, கிண்டியில் பி.இ சிவில் இன்ஜினியரிங் முடித்து, கேம்பஸ் இன்டெர்வியூவில் RITES (Railway India Technical and Economical Services) என்னும் பப்ளிக் செக்டர் கம்பெனியில் வேலையில் சேர்ந்தேன். பதினான்கு வருடங்களில் டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், நாக்பூர் மற்றும் பல நகரங்களில் மெட்ரோ ரயில் ப்ரொஜெக்ட்டில் Deputy General Manager ஆக தலைமை பொறுப்பு வகித்தேன். தற்காலிகமாக அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டேன். இது என்னைப் பற்றிய சிறிய அறிமுகம்.

இப்போது என் எழுத்தைப் பற்றி,

“எண்ணிய முடித்தல் வேண்டும்

நல்லவே எண்ண வேண்டும்”

என்ற பாரதியார் பாட்டின் வரிகளுக்கு ஏற்ப,

என்னுள் எழும் எண்ணத்திற்கு தீர்வாக எழுத்து மொழியை தேர்ந்தெடுத்துள்ளேன். நம் பேச்சு ஒரு மொழி என்றால், அதற்கு வடிவம் கொடுக்கும் எழுத்தும் ஒலியின் மொழி தானே!!

பிறகு நம் வாழ்க்கையில்...

போராட்டம் இல்லாத நாட்கள் தான் உண்டோ?

இந்த பூமியில் பிறந்த சிறு உயிரினம் கூட தன் வாழ்வின் நோக்கத்திற்காக போராடுகிறதே!! பிறகு நம் மனித இனத்தின் போராட்டத்தைக் கேட்கவா வேண்டும்?

இந்த போராட்டக் களத்தில் நம்மை சுற்றி இருக்கும் உறவுகளோடு புரிதலும் விட்டுக் கொடுத்தலும் ஒன்று சேர்ந்தால்??

வாழ்க்கையில் ஜெயம் நிச்சயம் அல்லவா?

இவை அனைத்தையும் என் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் வெளிக் கொணர்ந்துள்ளேன்!!

எத்தனையோ காதல் கதைகளை படித்திருப்பீர்கள்...

இந்தக் கதை என் பாணியில்!!!

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை silambarasi.m@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிய படுத்துங்கள். எனது புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள புஸ்தகா நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

eBooks