S.P. Balu Tamil author

S.P. Balu (எஸ்.பி. பாலு )

About the Author

மக்கள் குறைதீர்க்கும் சமுதாயத் தொண்டினை தமது எழுத்துகள் மூலமாகவும், செயல் மூலமாகவும் நன்கே செய்து வருபவர் புதுக்கோட்டை திரு. எஸ்.பி. பாலு அவர்கள்.

அச்சுக்கலை வித்தகர் புதுக்கோட்டை கண்ணபிரான் எஸ். பரசுராம் அவர்களின் புதல்வர். சிறுவர் இலக்கியச் செல்வர் திரு. பி. வெங்கட்ராமன் அவர்களின் இளைய சகோதரர்.

புகழ்பெற்ற மாபெரும் டி.வி.எஸ். நிறுவனத்தில் பல்லாண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

மக்கள் பிரச்னைகளைப் பற்றி பத்திரிகைகளில் சின்னஞ்சிறு கட்டுரைகள், துணுக்குகள், வாசகர் கடிதங்கள் மூலமாகவும், வானொலி 'நகர்வலம்' பகுதி மூலமாகவும் பொதுமக்களின் குறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இவரது துணிச்சலான எழுத்துகள் மூலம் எத்தனையோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு" என்று நாளும் பொது நலப்பணி செய்து வருபவர் திரு. எஸ்.பி. பாலு அவர்கள்.

தொடர்ந்து சாதனையாளர்களை ஆண்டுதோறும் பாராட்டி சிறப்பித்து அவர்களது அரும் பெரும் சாதனைகளை அருமையான புத்தகங்களாக ஆவணப்படுத்தி வரும் அற்புத மனிதர், 'சாதனைச் செம்மல்' புதுக்கோட்டை இலக்கியப் பேரவைத் தலைவர், சொல்லருவி திரு. மு. முத்து சீனிவாசன் அவர்கள் திரு. எஸ்.பி. பாலு அவர்களுக்கு 'சமூகசிற்பி' என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்துள்ளார்.

eBooks