Sujatha Desikan
About the Author
‘சுஜாதா தேசிகன்’ என்ற பெயரில் பத்திரிக்கையிலும், சமூக ஊடகத்திலும் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். "தேசிகன் என் கதைகளில் ஒரு 'அத்தாரிட்டி'. பல சமயங்களில் நான் எழுதிய
கதைகளைப் பற்றிய சந்தேகங்களை நானே அவரிடம் கேட்பேன். இந்த வருஷத்தில் என்ன பத்திரிகையில்
எழுதியது என்று தெளிவாகத் தகவல் கொடுப்பார். ஓர் எழுத்தாளனுக்கு இவ்வகையிலான வாசகர்கள் அமைவது அதிர்ஷ்டமே!" என்று எழுத்தாளர் சுஜாதவிடம் பாராட்டுப் பெற்றவர்.
வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிறார். நெருங்காதே நீரிழிவே என்று இவர் கல்கியில் எழுதிய தொடர் வாசகர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றது.