1988 ல் ஜெயந்தி சுந்தரம் என்கிறபெயரில் ஆரம்பித்து பின் திருமாமகள் என்கிற பெயரில் என் எழுத்துப் பயணம் தொடர்ந்தது. முதல் கதை குமுதத்தில். படிப்படியாக முன்னேறி, 150 சிறுகதைகள் முறையே குமுதம் விகடன் கல்கி, மங்கையர் மலர், குங்குமம், சுமங்கலி , சாவி, இதயம் பேசுகிறது, தமிழரசி தாய், ராஜம், வாரமலர், அமுதசுரபி ( நிறைய பத்திரிகைகளில் பரிசு வாங்கியுள்ளேன்) 4 குறுநாவல்கள், ஒரு தொடர்கதை, தூர்தர்ஷனில் இரண்டு நாடகங்கள், இப்படியாகத் தொடர்கிறது என்னுடைய எழுத்து பயணம். சமீப காலங்களில் பிரான்சிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையிலிருந்து ஒரு கதை பிரசுரமாகியுள்ளது. வானொலி மூலம் நிறைய நிகழ்ச்சிகள் கொடுத்துள்ளேன்.