Varshith
(வர்ஷித் )

Genre type
1Travelogue
2Social
Book type
2Articles
1Poetry

About the Author

இவர் திருமதி ஜனனி கிருத்திவாசன். வர்ஷித் என்ற புனைபெயரில் கதைகளை எழுதியுள்ளார்‌.

தமிழ்நாடு அரசு பணியில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற, 60 வயதை கடந்த பெண்மணி.

"எமக்குத் தொழில் ஊர் சுற்றல்" என பாரதி பாணியில் சொல்பவர். அந்தளவு பயணம் பயணம் பயணம் தான். பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம்.

இந்தியாவின் அத்தனை ஊர்களுக்கும், மூலை முடுக்கெங்கும் பயணப்பட்டு, அதனைப் பற்றி வர்ணித்து எழுதுவதில் மிகத் தேர்ந்தவர்.

இவரது எழுத்தை படிப்பவர்களுக்கு, படிக்கும் போதே, தாங்களும் கூடவே அந்தந்த இடங்களுக்குச் செல்வது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் இவரது எழுத்து.

இவரது பயண கதைகளை படித்தவர்கள், பொம்பள மணியன் எனவும் பரணிதரன் எழுத்துக்களை படிப்பது போல் உள்ளது எனவும் சொல்வது வழக்கம்.

பயணம் செய்யும் இடங்களின், வரலாறு, புராண கதைகளுடனான தொடர்பு, ஆன்மீகத் தொடர்பு, தற்போதைய மக்களின் வாழ்க்கை என ஹிஸ்ட்ரி, ஜ்யோக்ரஃபி, ஆர்க்கிடெக்சர், சோசியல் லைப் என எல்லாவற்றையும் இவரது பயணக் கதைகளில் சொல்லி, படிக்கும் நம்மை, அந்த இடத்திற்கு கிளம்பிச் சென்று பார்த்து வந்துவிட வேண்டும், என்ற உத்வேகத்தை தந்துவிடும் இவரது எழுத்து.

இது மட்டுமல்ல, இயற்கையை போற்றுதலுடன், சமூக சிந்தனையுடனான கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர்.

நம் பாரம்பரியமும் கலாச்சாரமும், பல நல்ல விஷயங்களை அடக்கிய பெரும் செல்வம். அதனை நமது வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துச் சொல்வது நமது தலையாய கடமை என்றுணர்ந்து எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்.

eBooks by Varshith

Ungalukkum Thayar Oru Lingam
Varshith
Kotta Pakkum Kozhundhu Vethalaiyum
Varshith
Subha Swaramai Vantha Sorsaram
Varshith