நான் VRP MANOHAR. நான் என்ற சொற்பதமே ஆணவத்தின் குறியீடு என்றே சொல்ல வேண்டும். ஆயின் என் ஆணவம் உங்களை தொந்தரவு செய்யாதவரை நான் நானாகவே இருந்து விட்டு போவதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்கக் கூடாது.
20 ஆண்டு கால ஊடகப் பயணம். 15 விளம்பரப் படங்கள், 7 குறும்படங்கள், திருக்குறளை முன்னிலைப் படுத்தி ' குறள் பரதம் ' என்றொரு நிகழ்ச்சி மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பிற்கு தயாரான நிலை. ' திகிலோடு விளையாடு ' என்றொரு முழு நீள தமிழ் திரைப்படம் - எழுதி இயக்கி தயாரித்து மே 1 - 2014ல் வெளியானது. விரைவில் MASALA CAFE என்ற பெயரில்YOUTUBE சேனல் துவங்க உள்ளேன். அடுத்த திரைப்படம் - முழு நீள நகைச்சுவை திரைப்படம் - வீ லவ் யூ பேய் மேடம் - டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு துவக்கம்.