முதலில் இந்த முகாமை நடத்துவதில் இருந்து அனைத்து வகையிலும் உதவி புரிந்த திரு.நா.முத்துநிலவன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்!!! தமிழ் இணையதளங்களில் அவர் மிகவும் பிரபலமானவர். அவரின் இணையதளத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...
நாங்கள் முதலில் அவரை தொடர்பு கொண்டபோது, அவருடைய எழுத்துக்களை வெளியிட எங்களின் விருப்பத்தை தெரிவித்தோம். அவர் இந்த யோசனையைக் கூறி, அவரின் எழுத்துலக நண்பர்களை வரவழைத்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவரின் வலைதளத்தில் இதைப்பற்றி தெரிவித்து, தினசரி பத்திரிக்கையில் இதை வெளியிட்டு, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். திரு.நா.முத்துநிலவன் அவர்களுக்கு, புஸ்தகா நிறுவனம் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
சுமார் ஆறரை மணிக்கு கூட்டம் தொடங்கியது. 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் வந்திருந்தனர். நாங்கள் தமிழில் மின்னூல் வெளியிடுவது பற்றியும், புஸ்தகா நிறுவனத்தைப் பற்றியும் ஒரு மணி நேரம் பேசினோம். அனைவரிடத்திலும் நிறைய ஆர்வம்... ஒவ்வொரு எழுத்தாளரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு.
எத்தனை விதமான எழுத்துக்கள்... நிறைய எழுத்தாளர்கள், தங்களின் கவிதைகளோடு வந்திருந்தனர். ஆன்மீகம்... சிறுகதைகள்... கட்டுரைகள்... என்று கணக்கிலடங்கா பல விதமான புத்தகங்கள். அனைவருக்கும் தங்களின் எழுத்து உலகெங்கும் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வமே அதிகம் இருந்தது. தங்களுக்கு இதனால் என்ன ஆதாயம் இருக்கும்... எவ்வளவு பணம் வரும்... போன்ற கேள்விகள் இல்லவே இல்லை. எல்லோரையுடைய கேள்வியும், எப்படி புத்தகத்தை கொடுக்க வேண்டும்... தங்களிடம் இருப்பதை எப்படி மின்வடிவில் மாற்றுவது... போன்ற கேள்விகளே அதிகம்.
கூட்ட முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, எழுத்தாளர்களிடம் இருந்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்டோம். இது ஒரு சிறிய ஆரம்பம் மட்டுமே என்பது மிக தெளிவாகப் புரிந்தது. இந்த கூட்டத்திற்க்கு வர இயலாத, ஆனால் மின்னூல் வெளீயீட்டில் ஆர்வம் உள்ளவர்கள் அனேகம் உள்ளதாக நிறைய எழுத்தாளர்கள் தெரிவித்தனர். இதே போல், மற்ற நகரங்களிலும் முகாம்கள் நடத்தினால், அனைவருக்கும் பயனாக இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்த கூட்டத்திற்க்கு வந்திருந்து, ஒப்பந்தம் செய்து கொண்ட அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கும் புஸ்தகாவின் மனமார்ந்த நன்றிகள்!!! இந்த கூட்டம் வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த அனைவருக்கும் நன்றி!! முக்கியமாக இந்த கூட்டம் நடைபெற உதவி புரிந்த கவிஞர் மு.கீதா, கவிஞர் மீரா.செல்வகுமார், முனைவர் மகா.சுந்தர் ஆகியோருக்கு புஸ்தகாவின் நன்றிகள்.
இதுபோல் எட்டுத்திக்கும் சென்று, நல்ல நூல்களை உலகிற்க்கு எடுத்து செல்வதில், செந்தமிழை தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது, அனைத்து நாடுகளுக்கும் எடுத்து செல்வதில் புஸ்தகா பெருமை கொள்கிறது. இது போன்ற முகாம்கள், எங்களை இன்னும் முனைப்போடு செயல்பட தூண்டுகிறது.
இதே போல் மற்றொரு முகாமில் இன்னும் பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் சந்திக்க திட்டமிடுகிறோம். திரு.நா.முத்துநிலவன் போன்றோரின் ஆதரவும், வந்திருந்த அனைவரின் ஆதரவும் இருந்தால் இது போன்றவை மிக மிக சுலபமே!!!
முகாமில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே....
புகைப்பட உபயம்: திரு.நா.முத்துநிலவன்
-புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிட்., பெங்களுரு