என் பங்கிற்கும் 108 திவ்ய தேசங்களை தரிசித்து என் அனுபவங்களை, என் அனுமானத்தில், என் கோணத்தில் வித்தியாசமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். வெறுமே என் அனுபவங்களை மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டு விடாமல், இதனைப் படித்து தாமும் அந்தந்த தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொள்பவர்களின் வசதிக்காக, சம்பிரதாய வரைமுறையிலிருந்து சற்றே விலகிச் செல்கிறேன். இதனை ஆன்றோர்கள் பொருத்தருள்வார்கள் என்று நம்புகிறேன்.
அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்திருக்கும் திருத்தலங்கள் பற்றிய கட்டுரைகளை, மேலே பட்டியலிட்டபடி, மாவட்ட ரீதியாகவே அளிக்கவிருக்கிறேன். இதனால், குறிப்பிட்ட மாவட்டத்துக்குப் போகக் கூடிய அன்பர்கள் ஒரே மூச்சில் அங்கே இருக்கக்கூடிய திவ்ய தேசங்களை தரிசித்துவிட்டு வரலாம்.
அந்த வகையில் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள திவ்ய தேசங்களை முதலில் வலம் வருவோம்.
அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.
டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.
சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.
Rent Now